திரையுலக பிரபலங்கள் உடல்நலம் குறித்து சமூக வலைதளங்களில்அவ்வப்போது வதந்தி பரவி வருவது வழக்கமாக இருந்து வருகிறது ஒவ்வொரு முறையும் சம்பந்தப்பட்டவர்கள் தங்கள் மீதான வதந்திகள் குறித்து வேதனையுடன் மறுப்பதும் வாடிக்கையாகவே இருந்து வருகிறது.
இந்நிலையில், பிரபல நகைச்சுவை நடிகர் கவுண்டமணியின் உடல்நலம் குறித்து சமூக வலைதளங்களில்அவ்வப்போது வதந்தி பரவி வருவதும், அவர் தரப்பில் இருந்து மறுப்பதும் வாடிக்கையாகவே இருந்து வருகிறது.இந்நிலையில்,இன்று காலை ஒரு ‘யூடியூப் சானல்’ ஒன்றில் நடிகர் கவுண்டமணி கவலைக்கிடம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்கிற செய்தி வெளியாகியது .இது அவரது ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
பலரும் கவுண்டமணிக்கே போன் செய்து விசாரித்தனர்.இதனால் பெரிதும் அதிர்ச்சியடைந்த கவுண்டமணி அவர்களிடம், தான் நலமாக உள்ளதாகவும் இது மாதிரியான வதந்திகளை நம்பவேண்டாம் என்றும் தெரிவித்தார்.இந்நிலையில்,கவுண்டமணி குறித்து தவறான செய்தியை பரப்பிய சம்பந்தப்பட்ட ‘யூடியூப்’ சானல் மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்து சானலை முடக்கவேண்டும் என கவுண்டமணி சார்பில் அவரது வழக்கறிஞர் சசிகுமார் காவல் ஆணையரிடம் புகார் அளித்துள்ளார்.