விவாகரத்து வாங்கிய பிறகு நடிகை அமலாவின் வாழ்க்கை ‘சித்தன் போக்கு சிவன் போக்கு ‘என்றாகி விட்டது.
வாழ்க்கையை விதம் விதமாக அனுபவிக்கிறார்.
யோகா தெரியும் .ஆயுர்வேதம் தெரியும். ஹிப்பியிசம் தெரியும்.!
என்னமா தத்துவம் பேசுகிறார் தெரியுமா? ரிஷிகள் கெட்டார்கள் போங்கள் !அந்த அளவுக்கு தத்துவத்தை சாறு பிழிகிறார்.
இந்நிலையில் வெகுநாட்களுக்கு பின்னர் தனதுநெடிய இடைவெளிக்குப் பின்னர் ஹைதராபாத்துக்கு படப்பிடிப்புக்காக சென்றிருக்கிறார்.
விமானத்தில் பறந்தபோது தத்துவம் பிறந்திருக்கிறது.!
”புதிய நினைவுகளை உருவாக்கு..
பழைய நண்பர்களை தொடர்பு கொள்..
எதிரிகளிடம் வருத்தம் தெரிவி..
உனக்கு பிடித்தமானவருக்கு நன்றி சொல்..
உன்னை நீயே கண்டுபிடி..
வேலை செய்யக் கிளம்பி..போ.. போக விடு..