டி .ராஜேந்தரின் வாரிசு சிலம்பரசன் , கார்த்திக்கின் வாரிசு கவுதம் கார்த்திக் இணைந்து நடித்தால் எப்படி இருக்கும்?
சூப்பரா இருக்கும்ல!
பிரபுவும் கார்த்திக்கும் மோதிய மாதிரியான பரபரப்புக்கு இந்த சிகரங்களும் மின்னல் ,இடிகளை இறக்கிவிடுவார்கள்.
ஞானவேல் ராஜா தயாரிப்பில் இந்தப்படம் வெளியாக இருக்கிறது.
இயக்குநர் யார் தெரியுமா?கிருஷ்ணா.!முன்னதாக நார்தன் என்பவர் இயக்குவதாக இருந்தது. தற்போது பல மாற்றங்களுடன் படம் தயாராகிறது.
‘சில்லுன்னு ஒரு காதல் ‘ ‘நெடுஞ்சாலை ‘ஆகிய படங்களை இயக்கிய படைப்பாளிதான் கிருஷ்ணா .!
கன்னடத்தில் வெளியான முஃப்தியின் ரீமேக்தான் இந்த படம். !படத்தின் புதிய பெயர் நாளை அறிவிக்கப்படுகிறது.
மிக மிக விரைவில் அடுத்த அறிவிப்பு வரவிருக்கிறது .