
சாகுந்தலம் என்பது சந்திரகுப்தனின் அரசவைப்புலவன் காளிதாசனால் எழுதப்பட்ட நாடக நூல்.!
நாயகன் துஷ்யந்தனாக இருந்தாலும் நாயகி சகுந்தலையை சுற்றிச் சுழல்கிற கதை.
காதலை முன்னிலைப்படுத்தி காளிதாசன் வர்ணித்து இருக்கிற அலங்கார சொல்லடுக்குகள் காலம் கடந்தும் பேசப்பட்டு வருகிறது.
சகுந்தலையின் கதையை திரைப்படமாக்குகிற முயற்சியில் பிரபல தெலுங்கு பட நிறுவனம் இறங்கியிருக்கிறது.
சகுந்தலையாக நடிப்பதற்கு எந்த நடிகையும் முன் வரவில்லை.ஆனால் தயங்காமல் கை கொடுத்திருப்பவர் சமந்தா!
திறமையான நடிகை. காளிதாசனின் வர்ணனைகள் பொருந்திப்போகிற உடலமைப்பு .
சரி ,துஷ்யந்தனாக யார் நடிக்கிறார்?
அங்கேதான் சிக்கல் !
எவரும் நடிப்பதற்கு தயாராக இல்லை. தயாரிப்பாளரின் நட்புப் பட்டியலில் இருக்கிற நடிகர்களே ஒதுங்கி ஓடிவிட்டனர்.
இதனால் தமிழக திரைவானில் தேடத்தொடங்கியிருக்கிறார்கள்.
துஷ்யந்தனாக நடிப்பதில் என்ன சிக்கல்?
கதைப்படி சகுந்தலைக்குத்தான் முதலிடம் கொடுப்பார்கள். நாயகனுக்கு இரண்டாவது இடம்தான். கிடைக்கவேண்டிய புகழை சமந்தா தட்டிக்கொண்டு போய் விடுவாரே! எப்படி ஹீரோ மின்ன முடியும்?












