“என்னை காலி பண்ண வேண்டும் என்பதற்காக குடிகாரன் என்கிறார்கள். நான் மது அருந்தவில்லை” என்று தன்னைப்பற்றிய குற்றச்சாட்டுக்கு பதில் சொல்லியிருக்கிறார் நடிகர் விஷ்ணு விஷால். மனைவியின் பிரிவு காரணமாக மது பழக்கத்தில் மாட்டிக்கொண்டதாக இவரே ஒரு அறிக்கையில் கூறி இருந்தவர்தான்.!
நடிகர் விஷ்ணு விஷால் குடிபோதையில் பிரச்சினை செய்ததாக அவர் குடியிருப்பை சேர்ந்த ஒருவர் போலீசில் புகார் அளித்துள்ளதாக செய்திகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இவ்விவகாரம் குறித்து விஷ்ணு விஷால் தனது சமூக வலைதள பக்கத்தில் கூறியுள்ளதாவது,.
“நான் அடுத்த படத்திற்கு சிக்ஸ் பேக் வைக்க வேண்டும் என்பதற்காக கடினமாக உடற்பயிற்சி செய்து கொண்டு வருகிறேன். மேலும் நான் டயட்டில் இருந்து வருகிறேன். இந்த நிலையில் நான் எப்படி மது அருந்துவேன்? ஒரு லாஜிக் வேண்டாமா?
இந்த குடியிருப்பில் இருந்து என்னை காலி செய்ய வேண்டும் என்பதற்காக அந்த தொழிலதிபர் மற்றும் அவரது குடும்பத்தினர் என் மீது அபாண்டமான குற்றச்சாட்டை கூறுகின்றனர்.
ஒரு சினிமாக்காரன் என்ற வகையில் சினிமா தொடர்பான நபர்கள் தினமும் என்னை சந்திக்க வந்து கொண்டிருப்பதால் காழ்ப்புணர்ச்சி காரணமாக இந்த குடியிருப்பில் இருந்து என்னை காலி செய்ய அவர்கள் இதுபோன்ற புகார்களை தெரிவித்துள்ளனர்” என்று விளக்கம் அளித்துள்ளார்.