
அங்கங்கே சமூக விரோதிகள் பா.ஜ . க .வில் இணைந்து தங்களை போலீஸ் பிடியில் இருந்து பாதுகாத்துக்கொள்வது சாதாரணமாகி விட்டது.
இதனால்தானோ என்னவோ பிற கட்சித்தலைவர்களை இழிவாக விமர்சனம் செய்கிற போக்கு அந்த கட்சியில் சாதாரணமாகி இருக்கிறது.
பிஜேபி நிர்வாகக் குழு உறுப்பினரும் ,வட சென்னை பாராளுமன்றத் தொகுதி பொறுப்பாளருமான வி.கோபி கிருஷ்ணன் என்பவர் திமுக பாராளுமன்ற உறுப்பினரும் ,கலைஞர் கருணாநிதியின் மகளுமான கனிமொழியை தரம் தாழ்ந்து ஆபாசமாக கோபிகிருஷ்ணன் டிவிட்டரில் பதிவு செய்திருந்தார்.
படுக்கை அறை பற்றிய இழிவான கருத்து அது.
அவரது பதிவுக்கு பாஜக பிரமுகர் குஷ்பு சுந்தர் கடுமையான கண்டனத்தை பதிவு செய்திருக்கிறார்.
“தரம் தாழ்ந்து,மரியாதைக்குறைவாக பெண்களை விமர்சனம் செய்வது கண்டனத்துக்குரியது. தண்டிக்கப்படவேண்டும்.கனிமொழி குடும்பத்தலைவி,பிரபல தலைவரது மகள் ,மக்களால் பாராளுமன்றத்துக்கு தேர்வு செய்யப்பட்ட பெண்.அவருக்கு மரியாதை கொடுக்க வேண்டும்.”என தனது கண்டனத்தை பதிவு செய்திருந்தார்.
மேலும் பலர் கோபி கிருஷ்ணனை கடுமையாக கண்டித்து பா.ஜ.க..தலைவி வானதி சீனிவாசனுக்கு அதை டேக் செய்துள்ளனர்.
இதன் பின்னர் கோபி கிருஷ்ணன் டிவிட்டரில் தனது கணக்கை மூடி விட்டார்.












