வித்தியாசமான கதைக்களம்தான் கர்ணன்.
மகாபாரத கர்ணன் கொடையில் சிறந்தவன், செஞ்சோற்றுக்கடன் பட்ட வல்லவன் என்றெல்லாம் அறியப்பட்டவன்தான் இந்த கர்ணன்.
கலைப்புலி தாணுவின் ‘கர்ணன் ‘எத்தகையவன்? நீதியின் ஆன்மா மரணம் எய்தாது என்கிற கருந்து சொல்லப்பட்டாலும் அதன் விரிவாக்கம் ஏப்ரலில்தான் தெரியும்.!
மாரி செல்வராஜ் -தனுஷ் கூட்டணியில் உருவாகியுள்ள இந்த கர்ணனை ஏப் .9 -ல்தான் தெரிந்து கொள்ள முடியும்.!
கடவுளின் தேசத்து வரவு ரெஜிஷா விஜயன். நாயகியாக வருகிறார். மற்றும் லால்,கவுரி கிஷன் ,யோகிபாபு, ஆகியோருக்கு பெயர் சொல்கிற கேரக்டர் என்கிறார்கள். சந்தோஷ் நாராயணன் இசை.
நெல்லைப்பகுதியில் உருவாக்கப்பட்ட கிராமத்தில் நடந்து வந்த படப்பிடிப்பு முடிந்து டீசரும் வெளியாகி விட்டது.
“எப்பய்யா வரும்?”னு எதிர்பார்த்திருந்த தனுஷின் ரசிகர்கள் கொண்டாடித்தீர்த்து விட்டார்கள்.
கர்ணனின் முதல் போஸ்டரை கலைப்புலி தாணு இன்று வெளியிட்டுள்ளார்.
முன்னர் நாம் சொன்ன சோதிடமும் சரியாக இருக்கிறது. ஏப்ரல் 9 -ல் கர்ணன் ரிலீஸ்.
சரி, முதல் போஸ்டர் எப்படி இருக்கிறது ?
தனுஷ் கை விலங்குடன் ! கரும் ரத்தம் சொட்ட சொட்ட பார்வையில் கடுங்கோபம்! யார் மீது என்கிற சஸ்பென்ஸுடன் வெளியாகியிருக்கிறது.