‘கடவுளே’ என்று ஆந்திர மக்களால் ஆராதிக்கப்பட்டவர் முன்னாள் முதல்வர் என்.டி .ராமராவ்.
இவரை கவிழ்த்து விட்டு ஆட்சிக்கு வந்தவர் சொந்த மருமகன் சந்திரபாபு நாயுடு. தெலுகு தேசம் கட்சியின் தலைவர்.
மச்சானின் கட்சியின் ஸ்டார் பேச்சாளர்தான் .என் டி.ஆரின் மகன் பாலகிருஷ்ணா . பாலைய்யா என செல்லமாக கூப்பிடுவார்கள்.
தற்போது தெலுகு தேசத்தில் நகரசபை தேர்தல் பிரச்சாரம் சூடு பிடித்திருக்கிறது.
பிரசாரத்துக்கு செல்வதற்காக பாலைய்யா கட்சி ஆபீசுக்கு போயிருக்கிறார். நடிகர் ,அதிலும் என்.டி.ஆரின் மகன் பார்ப்பதற்கு ரசிகர்கள் திரளமாட்டார்களா ? முண்டியடித்துக்கொண்டு பார்க்கிறபோது ஒரு ரசிகரை பளார் என்று அறைந்து விட்டார் பாலைய்யா.
இது அவருக்கு புதிது அல்ல. தொடர்ச்சியாக அறை விடுகிறவர்தான்.!
இவர் அறை விட்டதை யாரோ ஒரு புண்ணியவான் போனில் வீடியோவாக எடுத்து அலறவிட்டிருக்கிறான்,
அரை வாங்கியவனிடம் சில தெலுங்கு தேச புள்ளிகள் “பாலகிருஷ்ணா மீது தப்பில்ல”என்று சொல்லச்சொல்வதையும் படமாக்கி வெளியில் பரவ விட்டிருக்கிறார்கள்.
பாலகிருஷ்ணா தற்போது இப்படி புலம்பி வருகிறார்.: “அறைவிட்டதே பெட்டர் டா.! நீங்க கெஞ்சின வீடியோ இருக்கே அதான்டா கேவலமா இருக்கு!”