
நடிகர் திலகம் சிவாஜி கணேசனை காங்கிரஸ் கட்சி எப்படியெல்லாம் அவமானப்படுத்தியது, அவருக்கு சேரவேண்டிய சிறப்புகளை காங்.கட்சி பிரமுகர்கள் தடுத்தார்கள் என்பதெல்லாம் உண்மையான காங்.கட்சி தலைவர்களுக்கு தெரியும். பெருந்தலைவர் காமராஜர் மறைவுக்குப் பிறகு காங்கிரஸ் கட்சியை வளர்த்த நடிகர் திலகத்துக்கு எத்தகைய அவமரியாதைகளை இழைத்தார்கள் என்பது நடிகர் திலகத்துடன் நெருங்கிப்பழகியவர்களுக்கு தெரியும்.
காங்கிரஸ் கட்சியை விட்டு நடிகர் திலகம் விலகியபோது அவரது வேதனைகளைத் தாங்கி ஒரு அறிக்கையைத் தந்தார் .
அதைப்படித்துப்பாருங்கள். நீண்ட அறிக்கைதான் .பொறுமையாக படித்துவிட்டு ஒரு முடிவுக்கு வாருங்கள்.!
















