
நடிகை சமந்தாவும் கோடிகளில் சம்பளம் வாங்குகிற நடிகையாக உயர்ந்து இருக்கிறார்.
என்னமோ தெரியல ,சாகுந்தலம் படத்தில் நடிப்பதற்கு எந்த நடிகையும் முன்வரவில்லை.
இயக்குநர் குணசேகர் பலரிடம் கேட்டும் எந்த பலனும் இல்லாத நிலையில் பிரபல தயாரிப்பாளர் தில் ராஜு உள்ளே வந்ததும் டோட்டலாக நிலை மாறிவிட்டது.
கொடுப்பதை கொடுத்தால் அடம் பிடித்த மருமகளும் குடம் எடுத்து தண்ணிக்குப்போவாளாம்.
அதைப்போல தற்போது சமந்தாவே ஓகே செய்து விட்டார்.
தில் ராஜு விநியோகஸ்தராகவும் இருக்கிறார். பல தியேட்டர்களை தன்னுடைய கைக்குள் அடக்கியும் வைத்திருக்கிறார். பெரிய தமிழ் நடிகர்களின் படங்களை ஆந்திராவில் விநியோகிக்கும் பெத்த ராஜு இவர்தான் .இவரை எதிர்த்து எவரும் செயல்படமுடியாது.
டைட்டில் ரோலில் நடிக்கும் சமந்தாவின் சம்பளம் இரண்டரை கோடி.!
அடுத்து ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிற நந்தினி ரெட்டி படத்திற்கு சம்பளம் 3 கோடி.!












