
திமுகவுக்கு எப்படி ஒரு கருத்துக்கணிப்பு கமிட்டி இருக்கிறதோ ,அதைப்போல அதிமுகவுக்கும் ஒரு கமிட்டி இருக்கிறது..அதிமுகவின் கமிட்டியை கண்காணிக்கிற பொறுப்பு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் மகன் மிதுன் குமார் இருக்கிறார். ஒய்வு பெற்ற உளவுத்துறை அதிகாரி கே.என் .சத்யமூர்த்தியம் இருக்கிறார். இந்த கமிட்டிக்கு சுனில் முதல்வராக இருக்கிறார்.
இவர் அண்மையில் முதல்வர் எடப்பாடிக்கு ஒரு ரகசிய கடிதம் அனுப்பியதாக ஒரு கடிதம் வைரலாக வலம் வந்து கொண்டிருக்கிறது.
அதில் “எப்போதும் சாதகமாக இருக்கிற மேற்கு மண்டலம் அதிமுக மீதான அதிருப்தியால் கையை விட்டுச் சென்றுவிட்டது. தென் மண்டலத்தில் தினகரனின் அமமுக வாக்குகளைப் பிரிக்கிறது. வடக்கு மற்றும் மத்திய மண்டலங்கள் கூட நம்மைக் காப்பாற்றும் என நம்ப முடியாது.. பிரதமர் மோடி, உபி முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆகியோரின் தமிழக வருகை நிலைமையை மோசமாக்கி விட்டது. இதைக் கூற எனக்கு வருத்தமாக இருக்கிறது” என குறிப்பிடப்பட்டுள்ளதாக கூறப்பட்டிருக்கிறது.
இது உண்மையா?
“சுனில் இம்மாதிரியான கடிதம் அல்லது அறிக்கையை அனுப்பமாட்டார். போனிலும் பேச மாட்டார் .அதிமுகவின் தலைமையிடம் நேரிலேயே சொல்லிவிடுவார். இந்த கடித வேலைகள் .எதிர்க்கட்சியினரின் சித்து வேலைகள் “என்பதாக உறுதியுடன் சொல்கிறார்கள்.
அரசியலில் இதெல்லாம் சாதாரணமப்பா என்கிற கவுண்டமணியின் டயலாக்தான் ஞாபகத்துக்கு வருகிறது.
படத்தில் எடப்பாடியுடன் இருப்பவர் அவரது மகன் .












