
“தேவையற்ற சிகிச்சையை என் மீது செலுத்திவிட்டு ஸ்கின் அழகியல் டாக்டர் பைரவி செந்தில் ஊரில் இல்லாமல் போய்விட்டார்” என்று நடிகை ரைசா வில்சன் புகார் செய்திருக்கிறார். கண்ணருகில் வீக்கம்.
அவரது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டு புகாரை பதிவு செய்திருக்கிறார் நடிகை.
“நேற்று வேறு ஒரு அழகியல் சிகிச்சைக்காக சென்றிருந்தேன். அப்போது டாக்டர் பைரவி செந்தில் வேறு ஒரு சிகிச்சையை செய்யப்போவதாக சொன்னார்.
நான் தேவை இல்லை என்று மறுத்தும் பலவந்தப்படுத்தி செய்து விட்டார். அதன் விளைவாக முகம் வீங்கி விட்டது. கண்ணருகிலும் வீக்கம். இது தொடர்பாக தொடர்பு கொள்ள முயன்றபோது பதில் இல்லை. அவரது மருத்துவமனை ஸ்டாப்ஸ்களிடம் கேட்டபோது “டாக்டர் ஊரில் இல்லை”என்று சொல்லிவிட்டார்கள்.”என்பதாக ரைசா கூறியிருக்கிறார்.
டாக்டர் பைரவி செந்திலுக்கு சென்னை ஆழ்வார்பேட்டையில் இருக்கிறது அழகியல் மருத்துவமனை.












