
நடிகர் அப்புக்குட்டி….!
தேசியவிருது பெற்றவர் ,வெண்ணிலா கபடிக்குழு வழியாக அறிமுகம்.
அழகர்சாமியின் குதிரை என்கிற படத்துக்காக தேசிய விருது பெற்றவர்.
தல அஜித்தின் நட்புக்குரியவர். அப்புக்குட்டிக்காக அஜித் தனியாக போட்டோ ஷூட் எடுத்து மாற்றிக்காட்டியவர்.
பொதுவாக துணை கதாபாத்திரங்களில் நடிப்பவர்களின் பொருளாதார நிலைமை மந்தமாகவே இருக்கும். தேசிய விருது பெற்றவர் என்கிற பெருமையினால் பொருளாதாரநிலை மாறிவிடுவதில்லை. தமிழ்ச்சினிமாவில் மரியாதையை எதிர்பார்க்கமுடியாது. நாயக நடிகருக்கு சமமாக ஆசனங்களை கூட போட மாட்டார்கள்.
அத்தகைய நிலையில்தான் தற்போது அப்புக்குட்டி இருக்கிறார்.வறுமையினால் வாடகை கொடுக்கமுடியாமல் சாலிகிராமம் வீட்டை காலி செய்து விட்டு நகரின் எல்லைப்புறமான கோவூருக்கு சென்று விட்டார் என்கிறார்கள்.
என்ன செய்வது நடிகர் சங்கமும் முந்தைய அதிமுக அரசினால் மூடிக்கிடக்கிறது .புதிய அரசாணை திமுகதான் சங்கத்தை மீட்டு உரியவர்களிடம் கொடுக்க வேண்டும்.












