மிகப்பெரிய நற்பணியை செய்திருக்கிறார் இயக்குநர் லிங்குசாமி .
கொரோனா நோயாளிகளுக்காக அவர் ஆசிரமம் கட்டியுள்ளது பாராட்டைப் பெற்று வருகிறது.திரைத்துறைக்கு வந்து 20 ஆண்டுகளை நிறைவு செய்திருக்கிறார் லிங்குசாமி.
கேக் வெட்டி கொண்டாடிவிட்டுப்போவதை விட இந்த சமுதாயத்துக்கு பயனுள்ளதாக ஏதாவது ஒன்றினை செய்ய வேண்டும் என்கிற உந்துதல் காரணமாக அவர் இந்த பயனுள்ள பணியை செய்திருக்கிறார்.
டிவிட்டரில் பதிவிட்டுள்ள அவர் “கொரோனா நோயாளிகளுக்காக மணப்பாக்கம் ஆசிரமத்தைத் திறக்க எங்களுக்கு உதவியதற்காக சகோதரர் உதயநிதி ஸ்டாலின் , அமைச்சர் டி.எம்.அன்பரசன் மற்றும் கீர்த்தி சுரேஷ் ஆகியோருக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.” என்று தெரிவித்துள்ளார்.
இந்த ஆசிரமம் மணப்பாக்கத்தில் உள்ளது, தொடக்க விழாவில் கீர்த்தி சுரேஷ் மற்றும் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் கலந்து கொண்டனர்.
ஆனந்தம் வெற்றி படத்தின் வழியாக பிரபலமான லிங்குசாமி தன்னுடைய பதிவில் மேலும் சொல்லியிருப்பதாவது.;
தொடர்ந்து 20 ஆண்டுகளாக என்னை ஆதரித்து வருகிற ஆர்பி சௌத்ரி சார்,எனது தொழில்நுட்ப வல்லுநர்கள், கலைஞர்கள், நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் அனைவருக்கும் நன்றி.
ஆனால் நாம் தற்போது கொண்டாடும் மனநிலையில் இல்லை. அனைவருக்காகவும் பிரார்த்தனை செய்வது, இந்த தொற்றுநோயிலிருந்து மீள்வது தான் உண்மையான ஆனந்தம். ஊடக நண்பர்களுக்கும் அவர்களின் ஆதரவுக்காகவும் ஒரு சிறப்பு நன்றி. உங்கள் அனைவரது வாழ்த்துக்களுக்கும் நன்றி. பாதுகாப்பாக இருங்கள்” என்றும் தெரிவித்துள்ளார்.”