வதந்திகளுக்கு முதுமை என்பதில்லை.மரணிப்பதும் கிடையாது.அது வாழ்வாங்கு வாழ்ந்து கொண்டுதான் வருகிறது.
உலக அளவில் பிரபலமான நடிகர் டாம் க்ரூஸின் மிஷன் இம்பாசிபிள் 7 என்ற ஹாலிவுட் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் பாகுபலி நடிகர் பிரபாஸ் நடிக்கப் போவதாக சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வந்தது..ஆனால் நடிகர் பிரபாஸ் கருத்து எதுவும் தெரிவிக்க வில்லை.
இது குறித்து மிஷன் இம்பாசிபிள் படத்தின் இயக்குநர் கிறிஸ்டோபர் மெக்கோரி தனது ட்விட்டர் பக்கத்தில், ‘ நடிகர் பிரபாஸ் மிகவும் திறமையான மனிதர் என்றாலும், நாங்கள் ஒருபோதும் சந்தித்ததில்லை.என பதிவிட்டு இந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.