
ஒரு நடிகனை படம் முடிந்த பிறகு பாராட்டுகிற தயாரிப்பாளர்கள் அரிதிலும் அரிது.!
அந்த நடிகன் கொடுத்த குடைச்சல்கள் ,அந்தரங்க வேலைகள் ,உள்ளடி சேவைகள் இவைகளினால் மிகவும் புண்பட்டு போயிருப்பார்கள். இதனால் படம் முடிந்த பின்னர் அந்த நடிகனைப்பற்றிய கிசுகிசு ஒவ்வொன்றாக வெளிவரத்தொடங்கும்.
மாநாடு படம் முடிந்து இறுதிக்கட்ட வேலைகள் கொரானாவினால் தடைப்பட்டிருக்கிற நிலையில் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி வானளவுக்கு சிலம்பரசனை பாராட்டுகிறார்.
“இந்த மாற்றத்தை நான் எதிர்பார்க்கவேயில்லை. நேரத்துக்கு வந்து படத்தை முடித்துக் கொடுத்திருக்கிறார். அசைவ உணவுகளை தொடுவதில்லை. வாரத்தில் ஒரு நாள் கோவிலுக்குப்போகிறார். சர்ச்சுக்குப் போகிறார்.பள்ளிவாசல் செல்கிறார். எந்த விதமான கிசுகிசுவுக்கும் இடமில்லை. சிறப்பான ஒத்துழைப்பு,நிறைவான நடிப்பு ,தேவையான அளவுக்கு ஒத்துழைப்பு. நான் ரொம்பவும் சந்தோஷமாக இருக்கிறேன்”என்கிறார்.
இந்த மாற்றம்தான் சிலம்பரசனை உயரத்துக்கு அழைத்து செல்லும்.












