
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள படம் ஜகமே தந்திரம் .
ஓடிடி தளத்தில் வரும் 18ஆம் தேதி வெளியாகிறது.
நடிகர் தனுஷ்க்கு இந்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகாமல் நெட்ப்ளிக்ஸ் வழியாக வெளியாவதில் துளியும் விருப்பமில்லை என்பதோடு, இது குறித்து தனுஷ் பலமுறை தயாரிப்பாளரிடம், ‘திரையரங்குகளில் வெளியிட்டால் கர்ணன் பட த்துக்கு கிடைத்த வரவேற்பு மாதிரி பெரிய அளவில் இப்படத்துக்கு கிடைக்கும் என எடுத்துக் கூறியும் ,அவர் இதனை காதில் வாங்கவில்லை என்கிறார்கள்.
சமீபத்தில் தனுஷ் பாடிய பாடலும் வெளியான நிலையில் இப் படத்தின் டிரைலர் வெளியாகிவிட்டது.
. ஆனால் படக்குழு மீது உள்ள கடுப்பில் தனுஷ் இதையெல்லாம் கண்டு கொள்ளவில்லை. டிரைலர் மற்றும் பாடல் வெளியானது குறித்து எந்த டுவிட்டையும் பதிவிடவில்லை.
இந்நிலையில் படத்தை இயக்கிய கார்த்திக் சுப்புராஜ் மட்டுமே ஜகமே தந்திரம் படம் பற்றிய தகவல்களை வெளியிட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.












