
லலித்குமார் தயாரிப்பில் விக்ரம் நடிப்பில் ‘கோப்ரா’, ‘சீயான் 60’ ஆகிய படங்கள் உருவாகி வருகிறது..
இதில் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் உருவாகி வரும் ‘கோப்ரா’,நீண்ட நாட்களாகத் தயாரிப்பில் உள்ளது. கொரோனா அச்சுறுத்தல்களால் அடுத்தடுத்த லாக் டவுன் காரணமாக இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிவடையவில்லை.
மேலும், இப்படத்தின் மிக முக்கியமான கிராபிக்ஸ் காட்சிகளுக்கான பணிகளும் இன்னும் நிறைவடையாமல் உள்ளது.
இதில் விக்ரமுடன்,ஸ்ரீநிதி ஷெட்டி, மியா, பத்மப்ரியா, ப்ரியா பவானி ஷங்கர், கனிகா, மிரு னாளினி உள்ளிட்ட 6 நடிகைகள் நடித்துள்ளனர்.
இந்தப் படத்துக்குப் பிறகு கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் விக்ரம், துருவ் விக்ரம், சிம்ரன், வாணி போஜன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘சீயான் 60’.
இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தின் படப்பிடிப்பு சுமார் 50சதவீதம் முடிவடைந்துவிட்டது.இதில் கிராபிக்ஸ் காட்சிகளும் குறைவு என்பதால், வரும் ஜூலையில்முதலில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் ‘சீயான் 60’ படத்தின் படப்பிடிப்பை முடித்து கொடுத்துவிட்டு, பின்பு ‘கோப்ரா’ படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்ள உள்ளாராம். இந்த இரண்டு படங்களின் தயாரிப்பாளர் ஒருவரே என்பதால் இதில் எந்த சிக்கலும் இல்லை என்கிறார்கள்.












