
ஆயூர்வேத கல்லூரி மாணவி விஷ்மயா . வரதட்சணை கொடுமை காரணமாக தற்கொலை செய்து கொண்டார். கேரளத்தில் மிகவும் பெரிய பரபரப்பை ஏற்படுத்திய நிகழ்வு. விஷ்மயாவின் தற்கொலைக்குப் பின்னர் கேரளத்தில் பெண்களுக்கு மத்தியில் புதிய விழிப்புணர்வு ஏற்பட்டிருக்கிறது என்றே சொல்லலாம். 
“நாங்கள் வரதட்சணை கொடுக்க மாட்டோம்” என்பதாக மாநிலம் முழுவதும் பெண்கள் போர்க்குரல் எழுப்பி வருகிறார்கள்.
நடிகர் மோகன்லால் நடித்து வருகிற ‘ஆராட்டு’ என்கிற படத்தின் முன்னோட்டத்தை வெளியிட்டு வரதட்சணைக்கு எதிரான அவரது கருத்தை வெளியிட்டிருக்கிறார்.
“வரதட்சணைக்கு எதிராக அனைவரும் குரல் கொடுப்போம் .பெண்களுக்கு சம உரிமை ,நீதி கிடைக்கவேண்டும் .அத்தகைய புதிய கேரளத்தை உருவாக்குவோம். இந்த முயற்சியில் அனைவரும் ஏற்பட வேண்டும்.
பெண்கள் என்றாலே கல்யாணம் செய்து கொள்ள வேண்டும் என்பது கட்டாயமில்லை. பெண்கள் சுதந்திரமாக இருக்க வேண்டும். அதுதான் அரசியல் ரீதியானது” என்று சொல்லியிருக்கிறார்.












