
இப்போதெல்லாம் வாட்ஸ் அப்ப திறந்தால் அடையாளம் தெரியாதவர்களின் இருந்து நன்கு அறிமுகமான நடிகைகள் வரை ,அத்தனை பேருமே போட்டோ ஷூட் நடத்திய படங்கள்தான்.!கவர்ச்சி என்கிற பேரில் வாய்ப்புத் தேடுகிற ‘அப்ளிகேஷன் ‘ஷாட் ‘களாகவே இருக்கின்றன.
காரணம் ,லாக் டவுன் ! வேலை தேடுகிறார்கள். !
இன்று ஒரு படம்.
நடிகை இனியாவின் நிழல் படம்.
இதுவரை இப்படியொரு ‘திறந்த புத்தகமாக ‘அவர் படங்களை வெளியிட்டதாக நினைவில்லை.
திறமையை வெளிப்படுத்தவேண்டிய நடிகைகள் தேகத்தை திறந்து காட்டுகிறார்கள். அவலம்தான்.ஆனால் யாரை குற்றம் சாட்ட முடியும்?
வாய்ப்பளிக்க வேண்டியவர்கள் தயாரிப்பாளர்கள்,படைப்பாளிகள்.
அவர்கள் எதைத் தேடுகிறார்கள் என்பது தெளிவாகத் தெரிவதில்லை அவர்களது படங்களில்!
மறைந்த ஒளிப்பதிவாளர் கர்ணனுடன் சேர்ந்து மறைந்து விட்டதாக கருதப்படுகிற ‘வைட் ஆங்கிளுக்கு’ புத்துயிர் கொடுக்கக்கூடிய திறமைசாலிகள் தேவை என கருதுகிறார்கள் இனியா போன்ற நடிகைகள்.!












