
உலகநாயகன் கமல்ஹாசனை பாலிவுட்டின் மருமகன் என்றும் சொல்லலாம். பெண்ணெடுத்திருந்தார் அல்லவா.!
அவர் பாலிவுட்டில் நடித்திருந்த ஏக் துஜே கேலியே ,மற்றும் சத்மா ,சாச்சி 420 ஆகிய படங்கள் வெற்றிப்படங்களாக அமைந்திருந்து அவர் பாலிவுட்டில் தொடர்ந்து இருக்க முடியவில்லை.
சூப்பர் ஸ்டார் ரஜினியும் பாலிவுட்டில் தொடர்ந்து இருக்க முடியவில்லை.
ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர். ரகுமானை வளரவிடவில்லை.
பொதுவாக பாலிவுட்டில் மகாராஷ்டிரர்களை தவிர வேறு மாநிலத்தவரை வளர விட மாட்டார்கள் என்கிற குற்றச்சாட்டை பாலிவுட் நடிக நடிகையரே சொல்லுவார்கள். தற்கொலை செய்து கொண்ட சுஷாந்த் சிங் ராஜ்புத்தை உதாரணமாக சொல்லலாம்.
ஆனால் உண்மையான வேறு சில காரணங்களும் இருக்கிறது.
“அங்கே திட்டமிடல் என்பது முறையாக இல்லை. ஒரு படத்தை எடுத்து முடிக்க இரண்டு ,மூன்று வருடங்கள் ஆகிவிடும்.எனக்கு விரைவாக படத்தை எடுத்து முடிக்க வேண்டும் என்பதுதான் பிடிக்கும்.நடிகனின் வாழ்க்கை குறுகியது.இந்தி சினிமாவுக்கு பெரிய மார்க்கெட் இருக்கிறது.ஆனால் நடிகர்களின் வாழ்க்கை குறுகிவிடுகிறதே. தற்போது அத்தகைய நிலைமை இல்லை என்றாலும் இம்ப்ரூவ்மென்ட் என்பது இல்லை.இன்னும் நிறைய மாறுதல்களை செய்தாக வேண்டும் “என்கிறார் உலகநாயகன் கமல்ஹாசன் .
ராஜ் கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் மிகுந்த பொருட்செலவில், பிரம்மாண்ட தயாரிப்பில், உலகநாயகன் கமல் ஹாசன் நடிக்கும் “விக்ரம்” படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் இனிதே ஆரம்பம். விஜய் சேதுபதியுடன் இணைந்து நடிக்கும் முதல் காட்சியை வெற்றிப்பட இயக்குனர் லோகேஷ் கனகராஜ் படமாக்கினார். தொடர்ந்து படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. பகத் பாசில் விரைவில் படப்பிடிப்பில் கலந்து கொள்வார்.
கதை, திரைக்கதை, இயக்கம் – லோகேஷ் கனகராஜ்
வசனம் – ரத்னகுமார் & லோகேஷ் கனகராஜ்
ஒளிப்பதிவு – கிரிஷ் கங்காதரன்
இசை – அனிருத்
படத்தொகுப்பு – பிலோமின் ராஜ்
கலை இயக்குனர் -.சதீஸ் குமார்
சண்டை பயிற்சியாளர் – அன்பறிவு
நிர்வாக தயாரிப்பாளர் -. டிஸ்னி
தயாரிப்பாளர் – கமல் ஹாசன் .மகேந்திரன்
கமல் ஹாசன் மிகவும் துணிச்சலானவர் என்பது உலகுக்கே தெரியும்.
வெள்ளையர்களை எதிர்த்துப்போராடிய மருதநாயகம் படத்தின் தொடக்கவிழாவுக்கு நம்மை ஒரு காலத்தில் அடக்கி ஆண்ட வெள்ளையர்களின் இங்கிலாந்து நாட்டு மகாராணியை அழைத்து வந்தவர் கமல்ஹாசன்.
இந்தியா முழுமையும் அரசியல் ரீதியாக அறியப்பட்டவர் .
பாஜக அஞ்சுகிற மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி ,டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் ,காங் தலைவர் ராகுல் காந்தி ,பாஜகவை தலை தூக்கவிடாமல் படுக்க வைத்து விட்ட கேரளா முதல்வர் பினராயி விஜயன் ஆகியோருடன் தொடர்பில் இருப்பவர் கமல்ஹாசன் .
மக்கள் நீதி மய்யத்தை பிரசார ரீதியில் தமிழ்நாடு முழுமையும் கொண்டு சென்றாக வேண்டும் என்கிற வேகம் கட்சிக்காரர்களிடம் இருக்கிறது. அதை ஏன் இன்னமும் கையில் எடுக்கவில்லை என்கிற எண்ணமும் இருக்கிறது.
திமுக ,அதிமுக ,பாஜக ஆகிய மூன்று கட்சிகளை விமர்சனம் செய்து தீவிரமாக பிரசாரம் செய்ய வேண்டும் என்று விரும்புகிறார்கள் .இதற்கு மக்கள் நீதி மய்யத்தலைவர் கமல்ஹாசன் எப்போது பச்சைக்கொடி காட்டுவாரோ என்கிற தவிப்பு அவர்களிடம் இருக்கிறது.












