இயக்குநர் லிங்குசாமி, தெலுங்கு நடிகர் ராம் பொத்தினேனி நடிக்கும் இன்னும் பெயரிடப்படாத புதிய படத்தை தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் இயக்கி வருகிறார்.
கீர்த்தி ஷெட்டி கதாநாயகியாக நடிக்கும் இந்த படத்தில் ஆதி பின்னிஷெட்டி, நதியா உள்பட பலர் நடித்து வருகின்றனர்.சுஜித் வாசுதேவ் ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்துக்கு, தேவி ஸ்ரீபிரசாத் இசையமைக்கிறார்.இந்நிலையில் அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தும் வகையில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடக்கும் இடத்துக்கு இயக்குநர் ஷங்கர் திடீர் விசிட் அடித்துளார்.
இப்படத்தின் படப்பிடிப்பில் இயக்குநர் ஷங்கர் கலந்துகொண்ட புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இது குறித்து விசாரித்த போது, ஷங்கர் முதல் முறையாக தெலுங்கு நடிகர் ராம் சரண் கதாநாயகனாக நடிக்கும் புதிய படமொன்றை இயக்குகிறார்.
தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகும் இப்படத்தின் தெலுங்கு வசனங்களை பிரபல தெலுங்கு வசனகர்த்தா சாய் மாதவ் புர்ரா எழுதுகிறார். இவர்தான் லிங்குசாமி இயக்கி வரும் படத்துக்கும் தெலுங்கு வசனத்தை எழுதுகிறார் என்பதால் இவரை பார்ப்பதற்காகவே ஷங்கர் லிங்கு சாமி படப்பிடிப்புக்கு சென்றுள்ளார் என்கிறார்கள்.
பாகுபலி இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமவுலியின் ‘ஆர்.ஆர்.ஆர்’. திரைப்படம் உள்ளிட்ட பல தெலுங்கு சினிமாக்களில் பணியாற்றிய பிரபல திரைக்கதையாசிரியர் மற்றும் வசனகர்த்தா சாய் மாதவ் புர்ரா என்பது குறிப்பிடத்தக்கது.