
தமிழில் பொன் மாணிக்கவேல், பஹீரா மற்றும் பெயரிடப்படாத சில படங்களில் நடித்து வந்த பிரபுதேவா இப்பொழுது மீண்டும் இயக்கத்தை கையில் எடுத்துள்ளார்.
ஏஜிஎஸ் பட நிறுவனம் தயாரிக்கும் புதிய படத்தை பிரபுதேவா இயக்க உள்ளதாகவும், இதில் கதாநாயகனாக சிலம்பரசன் நடிக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.சிலம்பரசன் பிரபுதே வாவின் புதிய கூட்டணி குறித்து விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என தெரிகிறது.
சிலம்பு , கவுதம் மேனன் கூட்டணியில் வெளியான விண்ணைத்தாண்டி வருவாயா.அச்சம் என்பது மடமையடா படங்களைத்தொடர்ந்து மீண்டும் புதிய படத்துக்காக சிலம்பு -மேனன் இணைந்துள்ளனர் .
வேல்ஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பில் உருவாகும் இப்படத்திற்கு நதிகளிலே நீராடும் சூரியன் என தலைப்பு வைக்கப்பட்டு இருந்தது.
இப்படதலைப்பு சிம்பு ரசிகர்களை பெரிய அளவில் ஈர்க்க வில்லை பலரும் படத்தலைப்பை மாற்றுமாறு கோரிக்கை விடுத்து வந்த நிலையில்,இந்த தலைப்பு தற்போது மாற்றப்பட்டு உள்ளது.
வெந்து தணிந்தது காடு.!












