
செப்டம்பர் 10 ஆம் தேதி தலைவி ரிலீஸ் என்பதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.
மர்ம மரணம் என்கிற சந்தேகத்தை ஏற்படுத்திய முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பயோபிக் படம்தான் ‘தலைவி’ .இந்தி நடிகை கங்கனா ரனாவத் நடித்திருக்கிற படம்.
இயக்குநர் ஏ எல்.விஜய் இயக்கியிருக்கிற படம்.
“பெரிய திரையில் பார்க்க வேண்டிய தலைவியின் கதையை செப்டம்பர் 10.ஆம் தேதி காணலாம்” என்று கங்கனா தன்னுடைய சமூக வலை தளத்தில் அறிவித்திருக்கிறார்.
இந்த படத்தில் எம்.ஜி.ஆராக அரவிந்த்சாமி நடித்திருக்கிறார். மற்றும் சமுத்திரக்கனி முக்கிய வேடமான ஆர்.எம்.வீரப்பன் கேரக்டரில் நடித்திருக்கிறார். மற்றும் பல முக்கிய நடிகர்கள் நடித்திருக்கிற இந்த படம் அதிர்வலைகளை ஏற்படுத்தலாம் என்று அரசியல் தலைவர்கள் எதிர்பார்க்கிறார்கள்.
ஆனால் சர்ச்சையை ஏற்படுத்தலாம் என நம்பிய சார்பட்டா பரம்பரைக்கு சேதம் எதுவும் இல்லை என்கிறபோது தலைவி வழக்கமான படமாக வந்து போகும் என்று சிலர் நம்புகிறார்கள்.
எம்.ஜி.ஆரை மறந்து விட்டவர்கள் ஜெயலலிதாவையும் மறந்திருப்பார்கள் என்று நம்ப முடியாது என்பதும் ஒரு சிலரின் கருத்து.எந்த பொந்துவில் என்ன இருக்கும் என்று யூகிக்க முடியாது. எலியும் இருக்கலாம்.நாகமும் இருக்கலாம்.!!












