கருத்து சொல்கிறேன் என்று கழுத்தை நெரிக்கிற படங்களைப் போலில்லாமல் ,குச்சி மிட்டாயைக் காட்டிக் குழந்தைக்கு மருந்து புகட்டுவது போல மருத்துவ உலகில் நடக்கிற கழுத்தறுப்பு வேலைகளை சொல்லியிருக்கிறார்கள்.
இதனால்தான் பல சர்வதேச விருதுகள் இந்த படத்துக்கு.!
தமிழ் வழி உணவகம் ,தமிழ் வழிக்கல்வி ,தமிழ் மருத்துவம் என சொல்வதால் இனம் மொழி கலாச்சாரம் சார்ந்து திரைக்கதை செல்வதால் சற்று பெருமையாக இருக்கிறது.
இங்கிலிஷ் மீடியம் ,அலோபதிக் வைத்தியம் எந்த அளவுக்கு நம்மை அடிமைப்படுத்தி வைத்திருக்கிறது என்பதை என்பதை முன்பாதியில் சொல்கிற இயக்குநர் சபரிநாதன் முத்துப் பாண்டியன், பிற்பாதியில் அதிலிருந்து எப்படி மீளுவது என்பதை சொல்லியிருக்கிறார்.
தமிழ்ப் பற்றுடன் வாழும் கதையின் நாயகன் செந்தில்நாதன் தாயில்லாத தன் ஆறு வயதுப் பெண் குழந்தை மீது உயிரையே வைத்திருக்கிறார்.
செந்தில்நாதனுக்கு காதலில் தேர்வு பெற முயன்று இருக்கிறார். பெரிய நடிகர்களே காதல் காட்சிகளில் அல்வா கிளறுகிறபோது இவர் பரவாயில்லை என்றுதான் தோன்றுகிறது. கண்ணெதிரே கடத்தப்படுகிற மீட்டெடுக்க முடியாமல் தவிப்பது நிறைவாக இருக்கிறது.
முதல் நாயகி சாண்ட்ரா நாயர். மற்றொரு நாயகி அர்ச்சனா சிங் இருவரும் கொடுத்த வேலையை சிறப்புடன் செய்திருக்கிறார்கள். சின்னஞ்சிறு சிட்டு பதிவத்தினி எடுத்து கொஞ்ச தோன்றுகிறது.
” முன்னெல்லம் குழந்தைகளைப் பிச்சை எடுக்கவோ, அல்லது குழந்தை இல்லாதவங்க கிட்ட விற்கவோதான் கடத்துனாங்க. இப்ப உறுப்புகளைத் திருட கடத்துறாங்களே..” என்று கதற வைக்கிற பெரியவர் செல்லத்துரை சொல்வது கவனிக்கத் தக்கது.
மருத்துவ மாபியாக்களைத் தேடிப்போகும் செந்தில்நாதன் சமுதாயத்தின் கவனத்தைக் கவர தீக்குளிக்க முயன்று ஆட்சியரின் கவனத்துக்கு இந்தப் பிரச்சினையைக் கொண்டு போகும் இடமும் பலே போட வைக்கிறது. ஆனால், எல்ல முயற்சியும் பலன் அற்றுப்போவது எதார்த்தமான சுடும் உண்மை.
பெரிய நடிகர்கள் நடித்து, பட்ஜெட்டும் கூடியிருந்தால் இன்னும் கவனம் பெற்றிருக்கும் படைப்பு. ஆனால், பெரிய நடிகர்கள் இப்படிப் படங்களில் நடிக்க முன் வர வேண்டுமே..?