
ஆக்கி ,பொங்கி சாப்பிட்டு ,பசியை ஆற்றிக் கொண்டு ,ஆழ்ந்து உறங்கி எழுந்த பிறகு எதுக்கு ராஜா பீடா?
ஆசை தீர கடலிலும் நீந்தியாச்சு,ஆத்திலேயும் நீந்தியாச்சு.கண்மாயிலும் மீன் பிடிச்சு சுட்டுத் தின்னாச்சு ! அப்புறம் எதுக்கு பாத்ரூம் டப் குளியல்?
ஒரு நியாயம் வேணாமா ? அவங்களுக்குள் இல்லறவாழ்க்கைக்கு உரிய வாழ்தல் நடந்து முடிச்சு ஆறு வருடங்களை கடந்தாச்சு ப்ரோ!
ஒவ்வொரு நாட்டிலும் விதம்விதமான இரவுகளை பார்த்தாச்சு! இப்ப முதல் இரவுன்னு ஒண்ணு நடந்தாதான் ஒத்துக்குவோம்னு சொன்னால் நீ என்ன மாதிரியான ஆளு தம்பி?
என்னய்யா யாருன்னு சொல்லாம புலம்பிட்டு இருக்கேன்னு கேட்கிறீங்களா ?
நயன்தாராவுக்கு செவ்வாய் தோஷம் .அதனால் முதலில் ஒரு மரத்தை கல்யாணம் பண்ணிக் கொண்ட பின்னர் விக்னேஷ் சிவன் தாலி கட்டினால் தான் சேதாரம் இருக்காது என்று சில ஊடகங்களில் தகவல் வந்திருக்கிறது.
மரம் மட்டையில்லாமல் கணவன் மனைவியாக வாழ்ந்த அவர்களை செவ்வாய் தோஷம் என்ன செய்தது?
முடைநாற்ற நம்பிக்கைகளை அவர்கள் என்றோ உடைத்து எறிந்து விட்டார்கள்.
காதலின் மேன்மையான வாழ்க்கையை அவர்கள் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள். புனிதமான உறவு அவர்களுக்குள் ஜீவனாக இருக்கிறது.
மரம் இல்லை கணவன்.அவன் மேன்மையானவன் .வாழ்கிற முறையில் தடுமாற்றம் வந்தால்தான் உறவு கெட்டுவிடும்!












