பரியேறும் பெருமாள், கர்ணன் போன்ற வெற்றி படங்களை இயக்கிய இயக்குநர் மாரி செல்வராஜ் அண்மையில் சென்னையில் தான் கட்டியிருக்கும் தனது புதிய இல்லத்திற்கு குடும்பத்தோடு குடியேறினார்.
மாரிசெல்வராஜின் குருநாதர் இயக்குநர் ராமின் ஆசிர்வாதத்தோடு நடந்த இந்த நிகழ்வில் இயக்குநர் பா.இரஞ்சித் மற்றும் தயாரிப்பாளர் கலைப்புலி தாணு மற்றும் திரையுலத்தை சார்ந்த நெருக்கமான நண்பர்கள் கலந்துகொண்டார்கள்.
இவர்களோடு இயக்குநர் மாரியின் மூன்றாவது பட நாயகனும் தயாரிப்பாளரும், சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் இன்று இயக்குனர் மாரி செல்வராஜ் இல்லதிற்கு சென்று தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்.
நிகழ்வின் போது ரெட் ஜெயன்ட் மூவிஸ் இணை தயாரிப்பாளர் எம்.செண்பகமூர்த்தி, ரெட் ஜெயன்ட் மூவிஸ் விநியோக நிர்வாகி சி .ராஜா ஆகியோர் உடனிருந்தனர்.












