Monday, May 18, 2026
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
Advertisement
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
No Result
View All Result
Cinema Murasam
No Result
View All Result
Home News

கவிப்பேரரசு பாராட்டிய நடிகை.!

admin by admin
March 8, 2022
in News
419 5
0
586
SHARES
3.3k
VIEWS
Share on FacebookShare on Twitter

தமிழ்ச்  சினிமாவில் வருடத்திற்கு குறைந்த பட்சம் ஐம்பது அறிமுக கதாநாயகிகளாவது வந்துகொண்டே தான் இருக்கிறார்கள். ஆனால் இதில் கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக்கொண்டு அடுத்தடுத்த படிகளில் ஏறி செல்பவர்கள் மிகவும் குறைவே..

You might also like

மலையாளத்தில் வெற்றி பெற்ற “அதிரடி’’ தமிழில் வெளியாகிறது!

கோமலி பிரசாத் நடித்திருக்கும் ‘மண்டவெட்டி’ திரைப்படம்!

முதல்வர் விஜய் மீது எனக்கு பொறாமையா? நடிகர் ரஜினிகாந்த் பரபரப்பு பேட்டி

ஆனால் ஒருசில நடிகைகள் மட்டும் ஒரு படம் வெளியாவதற்குள்ளாகவே அடுத்தடுத்த படங்களில் ஒப்பந்தம் ஆகி சட்டென ஒரு புகழ் வெளிச்சத்திற்குள் வந்து விடுவார்கள்.. அப்படிப்பட்டவர்களில் ஒருவர் தான் அறிமுக நடிகையாக களம் இறங்கியுள்ள அக்மார்க்  அசல்  தமிழ்பொண்ணு தீப்ஷிகா.( அப்படியா ,பெயரைப் பார்த்தால் அசல் மாதிரி தெரியலியே!!)

கடந்த ஒரு வருடத்திற்குள் தமிழில் மூன்று, தெலுங்கில் மூன்று என அரை டஜன் படங்களில் நடித்து வருகிறார் நடிகை தீப்ஷிகா.

கவிப்பேரரசு வைரமுத்துவே போனில் அழைத்து பாரட்டும் அளவுக்கு ஒரு பரபரப்பு வட்டத்திற்குள்ளும் வந்துள்ளார்.

 ரேணிகுண்டா, கருப்பன் உள்ளிட்ட படங்களை இயக்கிய பன்னீர்செல்வம் தான் இயக்கும் படத்திற்கான நடிகைகள் தேடலில் வைத்த ஆடிஷனில் கலந்துகொண்ட தீப்ஷிகா, இப்போது அந்தப்படத்தில் நடித்து முடித்தும் விட்டார். இந்தப்படத்தில் ஒரு பட்டாம்பூச்சி போல அவரது கதாபாத்திரம் வித்தியாசமாக வடிவமைக்கப்பட்டு உள்ளதாம்.

இந்தப்படத்தை தொடர்ந்து  விக்ரம் பிரபுவுடன் இணைந்து நடிக்கிறார் தீப்ஷிகா.. இந்தப்படத்தில் இவரது கதாபாத்திரம் சர்ப்ரைஸ் மற்றும் ட்விஸ்ட் கலந்த ஒன்றாக உருவாக்கப்பட்டுள்ளது…

கவிப்பேரரசுவின் கனவு காவியமான ‘நாட்படு தேறல்’ என்கிற ஆல்பத்தில் நடிக்கும் வாய்ப்பு.

இலக்கியத்தில் ஒரு புதிய முயற்சியாக நூறு பாடல்களை கொண்டு அவர் உருவாக்கி வரும் நாட்படு தேறல் என்கிற ஆல்பத்தில் இடம்பெறும் பாடல்கள் ஒவ்வொன்றையும் முன்னணி இயக்குனர்கள் இயக்கி வருகின்றனர்.

அந்தவகையில் இந்த ஆல்பத்தில் இடம்பெறும் கேசாதிபாதம் என்கிற பாடலில் நடன ஆசிரியையாக நடித்துள்ளார் தீப்ஷிகா. ஒரு பெண்ணின் தலைமுதல் பாதம் வரை அவளது அவயங்களை ஒவ்வொன்றாக இயற்கையுடன் ஒப்பிட்டு வர்ணித்து இந்த பாடலை எழுதியுள்ளார் வைரமுத்து. இந்தப்பாடலை விஜய் நடித்த பைரவா படத்தை இயக்கிய இயக்குனர் பரதன் தான் இயக்கியுள்ளார்.

இந்தப்பாடலுக்கான படப்பிடிப்பு எல்லாம் முடிந்து, கிட்டத்தட்ட அதை மறந்தே போயிருந்த சூழலில், திடீரென ஒருநாள் கவிப்பேரரசு வைரமுத்துவிடம் இருந்து தொலைபேசி அழைப்பு வந்தபோது முதலில் தீப்ஷிகாவால் அதை நம்பத்தான் முடியவில்லை..

“மாநாடு படம் பார்த்துவிட்டு தியேட்டரை விட்டு வெளியே வந்த சமயத்தில் புதிய நம்பரில் இருந்து ஒரு அழைப்பு வந்தது.. நான் வைரமுத்து பேசுகிறேன் என அவர் பேசியபோது, கூட்டத்தில் இருந்த நான் குழப்பம் ஒருபக்கம், பிரமிப்பு ஒருபக்கம் என ஸ்தம்பித்து போனேன்.. ஒருவேளை யாராவது கலாட்டா செய்கிறார்களோ என்று கூட தோன்றியது..

ஆனால் அதன்பின் பேசுவது கவிப்பேரரசர் தான் என உணர்ந்ததும் எனக்கு பேச்சே வரவில்லை.. கேசாதிபாதம் பாடலில் நடித்துள்ள நான் அந்தப்பாடலுக்கே உயிர்கொடுத்து சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளதாக பாராட்டிய வைரமுத்து சார், தமிழ்சினிமாவில் உனக்கு நல்லதொரு இடம் காத்திருக்கிறது என வாழ்த்தினார்.. தமிழ் சினிமாவின் மிகப்பெரிய ஜாம்பவான், அவராகவே அழைத்து வாழ்த்தும் அளவுக்கு எனது வேலையை சிறப்பாக செய்திருக்கிறேன் என்கிற மகிழ்ச்சியும் பெருமிதமும் ஏற்பட்டது” என சிலாகித்து பேசுகிறார் தீப்ஷிகா.

Tags: தீப்ஸிகாவைரமுத்து
admin

admin

Related Posts

மலையாளத்தில் வெற்றி பெற்ற “அதிரடி’’ தமிழில் வெளியாகிறது!
News

மலையாளத்தில் வெற்றி பெற்ற “அதிரடி’’ தமிழில் வெளியாகிறது!

by admin
May 18, 2026
கோமலி பிரசாத் நடித்திருக்கும் ‘மண்டவெட்டி’ திரைப்படம்!
News

கோமலி பிரசாத் நடித்திருக்கும் ‘மண்டவெட்டி’ திரைப்படம்!

by admin
May 18, 2026
முதல்வர் விஜய் மீது எனக்கு பொறாமையா? நடிகர் ரஜினிகாந்த் பரபரப்பு பேட்டி
News

முதல்வர் விஜய் மீது எனக்கு பொறாமையா? நடிகர் ரஜினிகாந்த் பரபரப்பு பேட்டி

by admin
May 17, 2026
இயக்குநர் பிரேம்குமார், பகத் பாசில் இணையும் புதிய படம் பூஜையுடன் துவங்கியது!
News

இயக்குநர் பிரேம்குமார், பகத் பாசில் இணையும் புதிய படம் பூஜையுடன் துவங்கியது!

by admin
May 17, 2026
கலையரசன் நடித்த ‘கொலைச் சேவல்’ ZEE5-ல் ஸ்ட்ரீமிங் ஆகிறது!
News

கலையரசன் நடித்த ‘கொலைச் சேவல்’ ZEE5-ல் ஸ்ட்ரீமிங் ஆகிறது!

by admin
May 17, 2026

Recent News

Actress

Actress Hansika Latest Images

Actress Hansika Latest Images

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty Latest Stills

November 12, 2025
Actress Hansika Latest Images

கவர்ச்சியில் கலக்கும் அமலாபால் !

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty New Photo Shoot

November 12, 2025
Tamannaah Bhatia New Photoshoot

Tamannaah Bhatia New Photoshoot

November 12, 2025

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?