
தமிழ்த்திரைப்பட விழாக்களில் பேசுகிறவர்களில் அடிதடி பாணியில் மிரட்டுகிறவர்களில் முக்கியமானவர்கள் கே.ராஜன்,மற்றும் ஜாக்குவார் தங்கம் .இவர்கள் கலந்து கொள்கிற விழாக்களில் சில மீடியாக்களுக்கு செம தீனி உறுதி.!
அன்று அப்படித்தான் ராஜனும் தங்கமும் பேசினார்கள்.!
ஸ்ரீ மகானந்தா சினிமாஸ் நிறுவனம் சார்பில் ஆர்.முருகேசன் தயாரித்திருக்கும் படம் ‘கம்பெனி’.
எஸ்.தங்கராஜ் இயக்கியிருக்கும் இப்படத்தில் பாண்டி, முருகேசன், திரேஷ் குமார், பிரித்வி, வலினா, காயத்ரி, வெங்கடேஷ், ரமா, சஞ்ஜீவ் பாஸ்கரன், சேலம் ஆர்.ஆர். தமிழ்செல்வன் ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.
ஏ.எஸ்.செந்தில்குமார் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு ஜுபின் இசையமைத்துள்ளார். விவேகா பாடல் எழுதியுள்ளார். இப்படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழாவில் , இயக்குநர் பாரதிராஜா, தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு, தயாரிப்பாளர் கே.ராஜன், நாக் ஸ்டுடியோ கல்யாணம், கில்டு தலைவர் ஜாக்குவார் தங்கம், சேலம் ஆர்.ஆர் தமிழ்செல்வன் உள்ளிட்ட பலர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துக்கொண்டார்கள். பாரதிராஜா குத்துவிளக்கு ஏற்றி நிகழ்ச்சியை தொடங்கி வைத்து பேசினார்.
தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு பேசுகையில், “இன்ப நாள் இது இனிய நாள் இது, கம்பெனி படத்தின் முன்னோட்டம் மற்றும் பாடல் வெளியீட்டு நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கியிருக்கும் பாரதிராஜா சார் மற்றும் பத்திரிகை சகோதர சகோதரிகளுக்கு வணக்கம். இந்த நிகழ்ச்சியின் அழைப்பிதழ் மிக பிரம்மாண்டமாக இருந்தது. எனக்கு கொடுத்த அழைப்பிழை பார்த்த போதே தயாரிப்பாளரின் தனித்துவம் தெரிந்தது. மேடையில் பேசும் போதும் உள்ளத்தில் உள்ளதை ஒளிவு மறைவு இல்லாமல் சொன்னார். அதுவே அவர் உயரிய நிலைக்கு வருவதற்கு சான்று. பெயரே கம்பெனி. அனைவரும் சேர்ந்து உருவாக்க கூடிய இந்த கம்பெனி நான்கு பேரை வைத்து விளம்பரம் செய்திருக்கிறீர்கள். நான்கு வேதங்கள், நான்கு திசைகளாக, எட்டுதிக்கும் கொடிகட்டி பறக்கும். அதுமட்டும் இல்லாமல், பாடல் வரிகள், “அடடா…அடடா…ஆனந்தம் அதுவே பேரின்பம்…” என்றார்கள் அதற்கு மேல் என்ன வேண்டும், எனவே ஆனந்தமும், பேரின்பமும் சேர்ந்து இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெறும் என்று இறைவனை வேண்டி விடைபெறுகிறேன், நன்றி வணக்கம்.” என்றார்.
நாக் ஸ்டுடியோ கல்யாணம் பேசுகையில், “இந்த படம் வெற்றி பெற வாழ்த்துகள். இந்த படத்தோட இயக்குநர் கொரோனா பிரச்சனையில் சிக்கினாலும், அதில் இருந்து மீண்டு படத்தை முடிக்க வேண்டும் என்ற லட்சியத்தோடு படத்தை வெற்றிகரமாக முடித்தார். அவர் என்னிடம் வரும்போதெல்லாம் முகத்தை தொங்க போட்டுக்கொண்டே வருவார். அப்போது நான், என்னடா இவரு இப்படி வருகிறாரே, படத்தை முடிப்பாரா, என்று நினைத்தேன். ஆனால், படம் முடியும் போது, எந்தவித முகசுழிப்பும் இல்லாமல், அனைத்து பணிகளையும் வேகமாக செய்து படத்தை முடித்துவிட்டார். இந்த படத்துல நான்கு பேர் நடித்திருக்கிறார்கள். அதில் சில புதியவர்கள், சிலர் ஒரு சில படங்களில் நடித்திருக்கிறார்கள். அதுபோல் இசையமைப்பாளர், ஒளிப்பதிவாளர் என அனைவரும் வளரும் கலைஞர்கள், தயாரிப்பாளர் புத்தம் புதுசு. வேலூரில் இருந்து எதுவும் தெரியாமல் வந்து, ரொம்ப கஷ்டப்பட்டு வாழ்க்கையில் முன்னேறி இந்த படத்தை எடுத்திருக்கிறார். நானும் தான் சாப்பாடு இல்லாமல் கஷ்ட்டப்பட்டிருக்கிறேன். பாரதிராஜா சார் என்னை தலையில் அடித்திருக்கிறார். ஆனந்த் தியேட்டரில் தியேட்டர் கொடுக்க மாட்டேன், என்று கூறியதால் அவர் என்னை தலையிலேயே அடித்தார். ’ஒரு கைதியின் டைரி’ படத்திற்கு, ஆனால் அவர் இப்போது அதை மறந்து விட்டார் போலிருக்கு. பிறகு தியேட்டர் கொடுத்து விட்டேன், படம் சூப்பர் டூப்பர் ஹிட். அதனால இந்த மேடையில் நான் நிற்க எனக்கு எல்லோரும் சப்போர்ட் பண்ணியிருக்காங்க. ஆனால், இந்த படத்தை பற்றி பேச எனக்கு எந்த தகுதியும் இல்லை. ஆனால், புதுசாக சொல்லியிருக்கிறார்கள். புதிய கான்செப்ட் படம் என்பதால், இவர்கள் வெற்றி பெற வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.” என்றார்.
தயாரிப்பாளர் கே.ராஜன் பேசுகையில், “ ஒரு பார்வையாளராக தான் இந்த டிரைலரையும், பாடல்களையும் பார்த்தேன், மிக சிறப்பாக இருந்ததோடு, எந்தவித முக சுழிப்பும் இல்லாமல் பார்க்க முடிந்தது. அதுமட்டும் அல்ல, பாடல் காட்சியில் நாயகன், நாயகி முத்தம் கொடுப்பது போல் நெருங்கி வருகிறார்கள், ஆனால் கொடுக்கவில்லை. அப்படி தான் இருக்க வேண்டும். ஆனால், சில ஹீரோக்கள் உதட்டோடு உதடு வைத்து முத்தம் கொடுக்கிறார்கள். இவையெல்லாம் வேண்டும் தான், ஆனால் அளவாக இருக்க வேண்டும். எந்த நேரமும் இச்சி….இச்சி….என்று கொடுக்க கூடாது, பிறகு போடா எச்ச பயலே, என்று சொல்லி விடுவார்கள். இதெல்லாம் சினிமாவுக்கு தேவை தான், இல்லை என்று சொல்லவில்லை. ஆனால், நம் பண்பாடு, கலாச்சாரம் கெடாமல் அளவாக வைக்க வேண்டும். எம்.ஜி.ஆர், சிவாஜி, ரஜினி காலங்களில் இதுபோன்ற காட்சிகள் வைத்தார்கள், ஆனால், நெருங்கி வரும்போது, இரண்டு கிளிகளை காட்டிவார்கள் அல்லது மலர்கள் மோதிக்கொள்வது போல் காட்டுவார்கள். ஏன், பாரதிராஜாவின் சிஷ்யர் பாக்யராஜ் படங்களில் இல்லாததா, ஆனால் அதை அவர் நகைச்சுவையாக செய்வார், அதனால் அதில் எந்த பாதிப்பும் இருக்காது, அதுபோல தான் வைக்க வேண்டும். என் தங்கை, தாய், பாட்டி, அக்கா என அனைவரும் பார்க்க வேண்டும். கலாச்சாரம் கெடாமல் படம் எடுக்க வேண்டும், அப்படி தான் இவர்கள் எடுத்திருக்கிறார்கள், அதற்காகவே இந்த படம் வெற்றி பெறும்.
, இங்கு வளர வேண்டிய தயாரிப்பாளரை க்ளோஸ் பண்ணிட்ராங்க. கடைகள் வைத்து வளர்வதைப்போல இங்கு வளர்ந்து வர முடியாது. நீங்க 28 கடை இருக்குனு சொல்லும் போது மகிழ்ச்சியாக இருந்தது. ஆனால், தயாரிப்பாளர் 28 படம் எடுத்தேன் என்று சொல்ல முடியாது. . பாரதிராஜா சாரிடம் ஒரு கேள்வி கேட்கிறேன், கடந்த 10 வருடங்களாக சுமார் 1000 படங்கள் எடுத்தார்களே அந்த தயாரிப்பாளர்கள் இப்போது எங்கே, ஏன் அவர்கள் படம் எடுக்கவில்லை? அனைவரும் நலிந்து போய்விட்டார்கள். சினிமா நல்ல தொழில், ஆனால் யாரும் உதவி செய்வதில்லை. குறிப்பாக நடிகர்கள் எந்தவித உதவியும் செய்வதில்லை. டப்பிங் முன்பாக முழு சம்பளத்தையும் கேட்டு நிற்கிறார்கள், அப்போது தயாரிப்பாளர் என்ன செய்வார், எங்கு போவார். நீங்க சம்பாதித்து வீடு வாங்கிட்டு போகணும், என் தயாரிப்பாளர் வீட்டை வித்துட்டு ரோட்டுக்கு வரணுமா. ஒரு மளிகை கடை வைத்து நஷ்டம் அடைந்தால் கூட, அதில் போட்ட தொகையில் 70 சதவீதம் திரும்ப வருகிறது. ஆனால், தயாரிப்பாளர் செய்யும் முதலீடுக்கு என்ன வருகிறது, முழுவதுமாக நட்டம் தான் அடைகிறார்.
டிவியில் இருந்து ஒரு நடிகர் சினிமாவுக்கு நடிக்க வந்திருக்கிறார். அவருக்கு ஒரு தயாரிப்பாளர் 12 லட்சம் ரூபாய் சம்பளம் பேசி நடிக்க வைத்திருக்கிறார். அதற்கு அந்த நடிகர் படப்பிடிப்பு துவங்கும் முன்பு 8 லட்சம் ரூபாய் கொடுக்க வேண்டும் என்றும் படப்பிடிப்பு முடிந்த பிறகு மீதியுள்ள 4 லட்சம் ரூபாய் கொடுக்க வேண்டும், என்று ஒப்பந்தம் போட்டிருக்கிறார். அதற்கு தயாரிப்பாளரும் சம்மதம் சொல்லி படப்பிடிப்பு நடந்திருக்கிறது. படப்பிடிப்பு முடிய நான்கு நாட்கள் இருக்கும் நிலையில், அந்த நடிகர் பாக்கி தொகையை கொடுத்தால் தான் நடிப்பேன், என்று கூறியிருக்கிறார். இது நியாயமா. அந்த நடிகர் யார் என்பதை அடுத்த மேடையில் நிச்சயம் சொல்வேன். நான் இதையெல்லாம் பார்த்துக்கொண்டு சும்மா இருக்க மாட்டேன், அனைவரையும் தட்டி கேட்பேன், என்னை யாராலும் தடுக்க முடியாது. அப்படி இங்கு பேசுவதை தடுத்தால், ரோட்டில் மீட்டிங் போட்டு பேசுவேன், இனி இவர்களை விடுவதாக இல்லை.”என்றார் .
கில்டு தலைவர் ஜாக்குவார் தங்கம் பேசுகையில், “சிறிய படங்களுக்கு நல்ல காலம் பொறக்க போகுது. அதற்கான நடவடிக்கையில் நாங்கள் இறங்கியிருக்கிறோம். செல்போனில் படம் பார்க்கும் வசதியை ஏற்பாடு செய்கிறோம். அது செயல்முறைக்கு வந்தால் தயாரிப்பாளர்களுக்கு நட்டம் என்பதே வராது.
அதேபோல், நடிகர் , நடிகைகளை சில ஊடகத்தினர் தரக்குறைவாக பேசுகிறார்கள், அவர்களை நான் தொடர்பு கொள்ள முயற்சித்தேன். ஆனால் போனை எடுக்கவில்லை. அதனால், அவர்கள் எங்கிருந்தாலும் என்னிடம் பேச வேண்டும், என்று தெரிவித்துக்கொள்கிறேன். இல்லை என்றால் அவர்களின் வீட்டுக்கு நான் வருவேன், என்பதையும் தெரிவித்துக்கொள்வேன். இனி சினிமாக்காரர்களை தரக்குறைவாக பேசுவதை பார்த்துக்கொண்டு சும்மா இருக்க மாட்டோம். சரியான செய்தியை போடுங்கள் அதை விட்டுவிட்டு, தவறான பொய்யான செய்திகளை போடாதீர்கள், உங்களுக்கும் குடும்பம் இருக்கிறது மறந்துவிடாதீர்கள், என்பதை இங்கு தெரிவித்துக்கொண்டு, கம்பெனி படம் மிகப்பெரிய வெற்றி பெற வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.” என்றார்.
இயக்குநர் பாரதிராஜா பேசுகையில், “. தயாரிப்பாளர் பேசும் போது ரொம்ப கஷ்டப்பட்டு வந்திருப்பதாக சொன்னார். நீங்க கஷ்டப்பட்டு வந்தால் தான் இதை அனுபவிக்க முடியும். இதே வடபழனியில் தெரு தெருவாக சோத்துக்கே வழி இல்லாமல் அலைந்தவன் தான் பாரதிராஜா. சினிமா லவ்வபல் வேர்ட், இது யாரையும் கைவிடாது, நீங்க சினிமாவ லவ் பண்ணீங்கனா அது உங்கள் லவ் பண்ணும். ஒரு வேலை செய்யும் போது அதில் ஒரு தாக்கம் வேண்டும், அப்படி இருந்தால் தான் வெற்றி பெற முடியும். இதில் நடித்திருக்கும் பசங்கள பார்க்கும் போதே படம் வெற்றி பெறும் என்று தோன்றுகிறது.
பெருமைகளை நாம் தலையில் தூக்கி வைத்துக்கொள்ள கூடாது, கக்கத்தில் வைக்க வேண்டும். நான் அப்படி தான் செய்வேன். என்னை இமயம், அப்படி இப்படினு சொல்லுவாங்க, அது அவங்களுக்கு தான், அவங்க சொல்றாங்க நமக்கு என்ன என்று ஒரு காதில் வாங்கி மற்றொரு காதில் விட்டுவிடுவேன். இங்கு பேசிய கே.ராஜன், பல பிரச்சனைகளை கூறினார். இதுவெல்லாம் கடந்து போகும், ஆனால் இதற்காக நாம் சண்டை போட கூடாது. எல்லமே நம்ம சகோதர்கள் தான், எனவே எதையும் பேசி தீர்த்துக்கொள்ள வேண்டும் என்பது என் எண்ணம்.”என்றார் .












