“நாங்கள்தான் தமிழ்ச்சினிமாவை காக்கிற காவல் தெய்வங்கள்” என்கிற வெற்று -வெட்டிப் பேச்சுக்களை அண்மைக் கால விழா மேடைகளில் கேட்க முடிகிறது.
இவர்களை பேச வைப்பதினாலேயே யு டியூப் வழியாக செய்திகள் வெளியாகிவிடுகின்றன என்று மக்கள் தொடர்பாளர்களும் தங்களது தயாரிப்பாளர்களை உற்சாகப்படுத்தி விடுகிறார்கள்.ஆனால் அத்தகைய பேச்சுகளை மக்கள் ரசிக்கவில்லை என்கிற உண்மையை மறந்து விடுகிறார்கள்.அவர்கள் உத்தரம் செய்வதற்கு பயன்படாத உதியன் மரங்கள்.!
தயாரிப்பாளர்களை ,நடிக ,நடிகையரை தரம் தாழ்ந்து விமரிசிப்பது ஒரு நாகரீகமாகவே அவர்களால் கருதப்படுகிறது.
அவர்களால் தமிழ்ச்சினிமாவுக்கு எந்த ஒரு நல்லவையும் நடக்கவில்லை என்பதே உண்மை.
சரி செய்திக்கு வருவோம்.
நடிகர் விதார்த் முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ‘பயணிகள் கவனிக்கவும்’ படத்தின் முன்னோட்டம் வெளியாகியிருக்கிறது..
இதனை ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி, இயக்குநர் வெங்கட் பிரபு ஆகியோர் தங்களது இணையப்பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார்கள் .எதிர்வரும் காலங்களில் இதுவே பயன்பாட்டுக்கு வரக்கூடும் .
இயக்குநர் எஸ். பி. சக்திவேல் இயக்கத்தில் தயாராகியிருக்கும் புதிய திரைப்படம் ‘பயணிகள் கவனிக்கவும்’.
நடிகர் விதார்த், கருணாகரன், லக்ஷ்மி பிரியா, சந்திரமௌலி, மாசூம் சங்கர், சரித்திரன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
எஸ். பாண்டி குமார் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு ஷாம்நாத் நாக் இசை அமைத்திருக்கிறார். மலையாளத்தில் ‘விக்ருதி’ என்ற பெயரில் வெளியாகி வெற்றி பெற்ற படத்தின் தமிழ் பதிப்பான ‘பயணிகள் கவனிக்கவும்’ படத்தை ஆல் இன் பிக்சர்ஸ் என்ற நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் விஜய ராகவேந்திரா தயாரித்திருக்கிறார். இந்த திரைப்படம்
ஆஹா டிஜிட்டல் தளத்தில் ஏப்ரல் 29 ஆம் தேதியன்று வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.
சமூக வலைத்தளப் பக்கத்தில் பகிரப்படும் செய்தி மற்றும் புகைப்படங்கள் எம்மாதிரியான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை உண்மைச் சம்பவங்களின் அடிப்படையாக வைத்து இதன் திரைக்கதை உருவாக்கப்பட்டிருக்கிறது. சமூக வலைத்தளங்களை பயன்படுத்துபவர்களின் பொறுப்புணர்வு குறித்தும் இதில் விவரிக்கப்பட்டிருக்கிறது. இது போன்ற தரமான படைப்புகளைத் தொடர்ச்சியாக தேர்வு செய்து ‘ஆஹா ஒரிஜினல்ஸ்’ படைப்பாக தங்களின் பிரத்யேக பார்வையாளர்களுக்காக வெளியிடுகிறது.












