
“தருமபுர ஆதீனத்தை பல்லக்கில் சுமக்க நானே வருவேன்னு” பிஜேபி தலைவர் அண்ணாமலை போராட்டக் குரல் கொடுத்திருக்கிறாரே ,அதை பாலோ பண்ணி நம்ம ஆளு பாபி சிம்ஹா ‘தடை உடை’ன்னு கிளம்பிட்டாரோன்னு ஒரு டவுட் .
ஆனா அந்த பட விழாவில் கவிப்பேரரசு வைரமுத்து கலந்துகொண்டார் என்பதால் இது அந்த தடை உடை இல்லேன்னு தெரிந்து கொண்டோம்.
நடிப்பிற்காக தேசிய விருது பெற்றவர் நடிகர் சிம்ஹா . கதையின் நாயகனாக நடிக்கும் ‘தடை உடை’ என்ற புதிய படத்தின் தொடக்க விழா சென்னையில் சிறப்புடன் நடந்தது.
இந்நிகழ்வில் கவிப் பேரரசு வைரமுத்து, தயாரிப்பாளர் ஷிபு தமீன்ஸ் உள்ளிட்ட திரையுலக பிரபலங்களுடன் படக்குழுவினரும் கலந்துகொண்டனர்.
அறிமுக இயக்குநர் என். எஸ். ராகேஷ் இயக்கத்தில் தயாராகும் முதல் திரைப்படம் ‘தடை உடை’. இதில் நடிகர் சிம்ஹாவுக்கு ஜோடியாக நடிகை மிஷா நராங் நடிக்கிறார். இவர்களுடன் பிரபு, செந்தில், ரோகிணி, சரத் ரவி, தீபக் பரமேஷ் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.
டெமல் சேவியர் எட்வர்ட்ஸ் ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு ஆதிஃப் இசை அமைக்கிறார். கவிப்பேரரசு வைரமுத்து பாடல்களை எழுத, சண்டைக்காட்சிகளை கணேஷ் அமைக்கிறார். ஆக்ஷன் திரில்லர் ஜானரில் தயாராகும் ‘தடை உடை’ படத்தை முத்ராஸ் பிலிம் பேக்டரி மற்றும் ஆருத்ரா பிக்சர்ஸ் ஆகிய பட நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் பி. ராஜசேகர் மற்றும் ரேஷ்மி சிம்ஹா ஆகியோர் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரிக்கிறார்கள்.












