சில நேரங்களில் சில சம்பவங்கள் அவர்கள் அறிந்தோ அறியாமலோ நடந்து விடுகிறது.
பொதுவாக ஆலயங்களில் காலணி அணியக்கூடாது என்பது முக்கிய விதி. அவன் அரசனாகவே இருந்தாலும் பாதுகையை ஆலயத்துக்கு வெளியேதான் விட வேண்டும்.
திருப்பதிக்கு மனைவி நயனுடன் வந்தபோது இருவரும் காலில் செருப்புடன் செல்பி எடுத்துக்கொண்டார் .
இது வில்லங்கத்தை உருவாக்கியது. கடுமையான கண்டனங்கள் ,விமர்சனங்கள் எழுந்தன.
இதனால் விக்னேஷ் சிவன் -நயன்தாரா இருவரும் மன்னிப்பு கேட்டு அறிக்கை விட்டு இருக்கிறார்கள் .தொங்கத்தொங்க தாலி அணிந்த நயன் கணவனுடன் இருக்கிற படத்தை பாருங்கள்.
“திருப்பதி திருத்தலத்தில்தான் எங்கள் திருமணம் நடக்க வேண்டும் என்று விரும்பினோம். ஆனால் சில லாஜிக் அதை தடுத்து விட்டது.இதனால் சென்னையில் நடத்த வேண்டியதாகிவிட்டது.
இதனால் சென்னையில் திருமணம் முடித்த கையுடன் வீட்டுக்கு செல்லாமல் நேராக திருப்பதி வந்து சாமி கல்யாணத்தை பார்த்துவிட்டு ஆசி பெற விரும்பினோம்.
அற்புதமான தரிசனம் கிடைத்தது.இங்கேதான் எங்களின் திருமணமும் நிறைவடைந்தது .
இதன் நினைவாக படம் எடுத்துக்கொள்ள விரும்பி வெளியே சென்றால் ரசிகர்களின் கூட்டம் அதிகம்.வேண்டாத பிரசினைகள். அதனால் நாங்கள் அவசரமுடன் செல்பி எடுத்தபோது செருப்புகள் அணிந்திருந்ததை மறந்து விட்டோம்.அதற்காக மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறோம்.
எங்களுக்கு தெய்வ நம்பிக்கை அதிகம்.கடந்த 30 நாட்களில் 5 முறை திருப்பதிக்கு வந்து தரிசனம் செய்திருக்கிறோம்.இங்கு தான் திருமணம் நடக்க வேண்டும் என்பதற்காக!
இறைவனை அவமதிக்க வேண்டும் என்பது எங்கள் நோக்கம் இல்லை.நாங்கள் அவரது பக் தர்கள்.”என்பதாக அறிக்கையில் கூறி இருக்கிறார்.
“