வதந்திகள் என்பது வாலறுந்த நரிகள் மாதிரி.!
உயிரோடு இருப்பவர்களுக்கும் நினைவு அஞ்சலி செலுத்தும் !
அண்மையில் நடிகை ஸ்ருதிஹாசனை ‘சீரியஸ் கண்டிஷனில் மருத்துவமனையில் ‘ இருப்பதாக எழுதிவிட்டார்கள்.
பெண்களுக்கு மாதவிடாய் தொடர்பான பிசிஓஸ் பிரச்னையைப் பற்றி ஸ்ருதி சொல்லி அந்த சிக்கல் தனக்கும் இருப்பதாக ஒரு பதிவினை போட்டார்.
அவ்வளவுதான் ,அந்த பிரச்னையைப் பற்றி தெரியாதவர்கள் ,அல்லது தெரிந்திருந்தும் அதை சொல்ல விரும்பாதவர்கள் ஸ்ருதியை சீரியஸ் கண்டிஷனில் மருத்துவமனையில் தள்ளி விட்டார்கள்.
“நான் முழு ஆரோக்கியத்துடன் இருக்கிறேன். ஓய்வில்லாமல் நடித்துக் கொண்டிருக்கிறேன். இதை உங்களுக்கு சொல்லிக்கொள்கிறேன் “ என பதிவு செய்திருக்கிறார்.