ஒன்னுமில்லாத படத்துக்கே மதுரையில் 1000 அடிக்கு பேனர் வைத்து அசத்திய சிலம்பரசனின் உயிர் ரசிகர்கள் ‘வெந்து தணிந்தது காடு ‘ என்கிற திருப்புமுனையாக அமையப்போகிற படத்துக்கு என்னெவெல்லாம் செய்து அதிரடி கொடுப்பார்களா ,தெரியாது.
மாநாடு படத்துக்கு அடுத்து சிலம்பரசனின் பேசு பொருளாக கவுதம் மேனனின் ‘வெந்து தணிந்தது காடு’தான் இருக்கும் என்கிறது கோலிவுட் பாக்ஸ் ஆபிஸ் வட்டாரம்.
பொன்னியின் செல்வன் பட வசனகர்த்தா பி.ஜெயமோகன்தான் கதாசிரியர். வசனமும் சமூகம் சார்ந்தே இருக்கும்.
படத்தை பெரிய பொருட்செலவில் தயாரித்திருக்கிறார் ஐசரி.கே.கணேஷ்.
ராதிகா சரத்குமார்,சித்தி இத்னானி ,சித்திக் ,நீரஜ் மாதவ், ஏஞ்செலீனா ஆப்ரகாம் ஆகியோரும் நடித்திருக்கிறார்கள்.
பாடல்கள் திரும்ப திரும்ப கேட்கும் ரகமாக இருப்பதற்கு ஏஆர் ரகுமான்தான் காரணம்.
சிலம்பரசன் இந்த படத்தில் முத்துவாக நடித்திருக்கிறார்.சூப்பர் ஸ்டார் ரஜினியின் படப்பெயர். ராசி நல்ல ராசி !
சிலம்பரசனுக்கு அம்மாவாக நடித்திருப்பது ராதிகா சரத் குமார்.
சிலம்பரசனுக்கு பலவித சிரமங்களை தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன் கொடுத்தாலும் அதனை எதிர்கொண்டு ஐசரி கணேஷ்தான் உதவியாக இருந்தார்.
சிலம்பரசன் புதிய பாணியில் கவுதம் மேனனின் இயக்கத்தில் நடித்திருக்கிற படம் சிறந்த பெயரை வாங்கித்தரும்.!