பிரச்னைக்குரிய தலைப்புகளை வைப்பதன் வழியாக தங்களை விவாதப்பொருளாக்கி அதன் வழியாக புரமோட் பண்ணிக் கொள்ளமுடியும்.
நடிகர் விஷ்ணு விஷால் நடிக்கிற திரில்லர் படத்துக்கு ‘ஆர்யன்’ என பெயரிட்டிருப்பதன் நோக்கம் ஒரு வகையான பரபரப்பை கிரியேட் பண்ணுவதற்குத்தான் என நம்பலாம்.
திராவிட நிலத்தில் ஆர்யனை விதைக்கிற முயற்சியாக இருக்கலாமோ?
விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ் தயாரிப்பில், சுப்ரா மற்றும் ஆர்யன் ரமேஷ் வழங்க, நடிகர் விஷ்ணு விஷால் மற்றும் இயக்குநர் செல்வராகவன் இணைந்து நடிக்க, இயக்குநர் கே.பிரவீன் இயக்கத்தில் உருவாகும் க்ரைம் திரில்லர் திரைப்படமாம் “ஆர்யன்” .
தமிழ்த் திரையுலகில் ஒவ்வொரு படத்திலும் வித்தியாசமான கதை களங்களில் நடித்து, வருபவர் நடிகர் விஷ்ணு விஷால்.
ராட்சசன் படத்திற்குப் பிறகு மீண்டும் போலீஸ் கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார். இயக்குநர் செல்வராகவனுக்கும் முக்கிய கேரக்டர் .
இப்படத்தில் ஷ்ரத்தா ஸ்ரீநாத், வாணி போஜன், சாய் ரோனக், தாரக் பொன்னப்பா, மாலா பார்வதி, அவினாஷ், அபிஷேக் ஜோசப் ஜார்ஜ் ஆகியோர் நடிக்கிறார்கள்.