அடப் பாவமே ,அப்பாவிய்யா அவரு.! திரை உலகில் அவரால் ஏற்றம் பெற்றவர்கள் ஏராளமய்யா !,தாராளமா தங்குமிடம் கொடுத்து ,பசின்னா காசும் கொடுக்கிற ஆண் அன்னை ன்னு சொல்வாங்க..அவருகிட்டேயா ஆட்டைய போடுறது?
அதாவது அவரது கவிதை வரிகளைத் திருடி படம் எடுத்திருக்காங்க.
பிரதீப் ரங்கநாதன்.இவரு கோமாளி படத்தை டைரக்ட் பண்ணிருந்தார். இவர் இப்ப ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரிக்கும் புதிய படத்தை டைரக்ட் பண்ணி , அதில் நாயகனாகவும் நடிச்சிருக்கா ர்.அந்தப் படத்திற்கு பேரு லவ் டுடே !
அந்தப்படத்தின் நாயகி இவானா. மற்றும் சத்யராஜ், ராதிகாசரத்குமார் ,யோகிபாபுஆகியோரும் நடிச்சிருக்காங்க.
காதலன் பிரதீப் ,காதலி இவானா ஆகியோரின் காதலை அறிந்த நாயகியின் தந்தை சத்யராஜ், நீங்கள் இருவரும் உங்கள் செல்போன்களை ஒருநாள் மாற்றி வைத்திருங்கள், அதன்பின் உங்களுக்குச் சம்மதமெனில் எனக்கும் சம்மதம்னு சொல்லுகிறார் .
அதன்படி மாற்றிக் கொண்டார்கள் .அதனால் என்னென்ன குழப்பங்கள் நடக்குது என்பதுதான் கதை.
.இந்த மையக்கருவினை பாவலர் அறிவுமதியின் பாடலை லாவி வைச்சிட்டாங்க.ன்னு சொல்றாங்க
அறிவுமதியின் கவிதை வரிகளை பாருங்க புரியும்.!!
காதலன்
கைப்பேசி
காதலி
கையில்
காதலி
கைப்பேசி
காதலன்
கையில்
ஒரு
மணி
நேரம்
மாற்றிக் கொள்ள
உடன்படும்
காதலர்
உண்டா
உண்டா
சொல்லுங்கள்
என்பது அவருடைய பாடல்!
ஏம்ப்பா ,அவரு பெத்த பிள்ளையை உம்பிள்ளைன்னு சொல்றியே ,எங்க மதுரையில இதுக்கு களவாணித்தனம்னு பேரு .!
பெத்தவன் பேரை போட்டு தப்பை திருத்திங்க ராசா .!
ஏஜிஎஸ் நிறுவனமும் டைரக்டர் பிரதீப்பும் என்ன சொல்லப்போறாங்க.?