வைகைப் புயல் வடிவேலு நம்பிக்கொண்டிருக்கிற படம் மாமன்னன்.
நாய் சேகர் கடித்த கடியில் மக்கள் மரண பீதியில் இருக்கிறார்கள்.
அவர்களுக்கு தைரியம் தருகிற வகையில் மாமன்னன் இருக்கும் என்று கோடம்பாக்கம் நம்புகிறது. இந்த படத்திற்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணையாக இருப்பதாலும் ,ஏஆர் ரகுமான் இசை என்பதாலும் மக்களிடம் நம்பிக்கை வந்திருக்கிறது.மாறி செல்வராஜின் இயக்கத்தில் உருவாக்கிய மாமன்னன் வடிவேலுக்கு ஒரு டானிக் என்கிறார்கள்.மாறி செல்வராஜ் முன்னிலையில் வடிவேலு டப்பிங் பேசி முடித்திருக்கிறார்.