
நம்ம ஊர் ரஜினிகாந்த் மாதிரி கேரள நாட்டு மோகன்லாலும் தன்னுடைய படத்தை பயன்படுத்தக்கூடாது என எச்சரிக்கை விடுத்திருக்கிறார்.
யாருக்குத் தெரியுமா ?
முன்னாள் நடிகையான ஸ்ரீ பிரியாவின் கணவர் ராஜ்குமார் சேதுபதி.இவர் தொழில் அதிபர்.இவர் கேரளா ஸ்ட்ரைக்கர்ஸ் என்கிற கிரிக்கெட் அணியை வாங்கியிருக்கிறார்.இந்த அணியில் மோகன்லால் கேப்டனாக இருந்தார்.அதாவது காலத்தில் விளையாடாத கேப்டன்.
என்ன நேர்ந்ததோ கேப்டன் பதவியில் இருந்து லால் விலகிவிட்டார்.குஞ்சாக்கோ கோபன் கேப்டனாகி இருக்கிறார்.
இதனால் தன்னுடைய பெயரையோ படத்தையோ பயன்படுத்தக்கூடாது என்று மோகன்லால் எச்சரித்திருக்கிறார்.












