பாலியல் ரீதியான தொல்லைகளை கண்டித்து வெளியான படங்களில் முக்கியமானது ‘அரியவன்.’ அளவுடன் அறிவுரை,அதிக அளவில் ரசனையான பொழுது போக்கு அம்சங்கள் என அரியவன் நம்மை கவருகிறான். பெண்களுக்கான அம்சங்கள் அதிகம். மேலெழுந்தவாரியாக இல்லாமல் பெண்களுக்கு பாதிப்பினை ஏற்படுத்தும் பாலியல் சிக்கல்களை துணிந்து சொல்லி இருக்கிறார்கள்.
கதையின் நாயகனாக இஷான் .இவருக்கு முதல் படம்.ஆனால் எத்தகைய தடுமாற்றமும்இல்லாமல்சரளமாகநடித்திருக்கிறார்.சண்டைக்காட்சிகள்,மற்றும் காதல் காட்சிகள் நெருடல் இல்லாமல் இருக்கிறது. பாராட்டலாம் நாயகனை!
பிரணாலி நாயகி.பார்ப்பதற்கு தெக்கித்தி ஜாடையாக இருந்தாலும் .இறக்குமதி.அழகாக இருக்கிறார். இயல்பான நடிப்பு.
நமக்கு நன்கு தெரிந்த முகங்களில் டேனியல் பாலாஜி பக்கா வில்லன் டேனியல் பாலாஜி. அலட்டிக் கொள்ளாமல் கேரக்டரை கடத்தி செல்கிறார்.சில இடங்களில் அலட்சியம் .!இயக்குநர் கண்டு கொள்ள வில்லையோ?
காமெடிக்கு கல்கி,சூப்பர் குட் சுப்பிரமணியம் ,சத்யன் .வழக்கம் போல சத்யன் சொதப்பல்.
ஒளிப்பதிவு விஷ்ணு ஸ்ரீ. இசை ஜேம்ஸ் வசந்தன் இருவரும் படத்துக்கு பக்க பலம்
இயக்குநர் மித்ரன் ஜவகர்.அறிமுக நடிகரின் நடிப்பாற்றலை வெளிக் கொணர்ந்ததுடன் கதையின் பாணியையும் மாற்றி ரசிக்க வைத்திருக்கிறார்.












