பிரபல நடிகையான குட்டி பத்மினி, தனது சொந்த யு டியூப் சேனலில் பல முன்னணி நடிகைகள் குறித்து சுவாரசியமான பல தகவல்களை பேசி வருகிறார்.இந்நிலையில் நடிகை ஸ்ரீவித்யா, கமல்ஹாசன் குறித்து பேசியுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அதாவது,”ரீ வித்யா போல ஒரு அழகான நடிகையை நான் இதுவரை பார்த்தது இல்லை. அவரது கண் அவ்வளவு அழகாக இருக்கும். கமல் மீது காதல் : அவர் கமல்ஹாசனுடன் பல படங்களில் இணைந்து நடித்துள்ளார்.
அப்போது, கமல்ஹாசன் மீது ஸ்ரீவித்யாவுக்கு ஒரு ஈடுபாடு வந்தது. கமலை பிடிக்காத நடிகைகளே இல்லை என்று சொல்லும் அளவுக்கு அவருக்கு நடிகைகளே ரசிகர்களாக இருந்தார்கள். அது போலத்தான் கமலின் நடிப்பைப் பார்த்து ஸ்ரீவித்யாவுக்கு அவர் மீது பைத்தியக்காரத்தனமான காதல் இருந்தது.
ஆனால், அந்த காலத்தில் கமல் ஒரே நேரத்தில் ஆறு பெண்களை காதலித்தார். ஸ்ரீவித்யா, பாலிவுட் நடிகை ரேகா, ஜெய சுதா, வாணி கணபதி மேலும் இரண்டு நடிகைகள் இருக்கிறார்கள். அத்தனை நடிகைகளையும் அவர் எப்படி சமாளித்தார் என்றே தெரியவில்லை. இதனால்தான் அவருக்கு சகலகலா வல்லவன் என்று பெயர் வந்து இருக்குமோ என நடிகை குட்டி பத்மினி கூறியுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.