தளபதி விஜய்யின் அடுத்த படத்தை அட்லீ டைரக்ட் பண்ணப்போறார் னு ஒரு தகவல்.
இதைவிட சூப்பர் தகவலாக கோபிசந்த் மலினேனி டைரக்ட் பண்ணப்போறார். சம்பளம் பேசியாச்சு ,டைரக்டரும் குஷியாகிட்டார்னு சூப்பரா ஒரு தகவல் உருண்டது.கோபிசந்தும் தளபதி விஜயை இன்ஸ்ட்டாவில் பாலோ பண்ண ஆரம்பிச்சிருக்கிறார்.
அட்லீக்கு அடுத்த படம் தமிழில் இல்ல,இந்தியில்தான் என்பது கன்பார்ம் ஆகிருச்சுன்னு அட்லீ தரப்பு உச்சி வெயிலில் சந்தோசமா விசில் அடிக்கிது.
இந்த மாதிரி செய்திகள் ஒரு பக்கம் வியூவர்ஸை அதிகமாக்க யுடியூபர்ஸ் சந்தோசத்தில்.!
ஆனால் அடிஷனலாக இப்ப ஒரு சேதி .
கஸ்டடி படம் அவ்வளவாக வசூலிக்காவிட்டாலும் டைரக்டர் வெங்கட் பிரபுதான் அடுத்து தளபதிக்கு டைரக்டர் என்கிறார்கள்.தளபதி 68 யார் கையில் என்பது இன்னும் உறுதியாகவில்லை என்பதுதான் தற்போதைய சேதி .