புது டெல்லி. மே, 19,
கடந்த 2016-ம் ஆண்டு எடுக்கப்பட்ட பணமதிப்பிழப்பு நடவடிக்கையை அடுத்து 2,000 ரூபாய் நோட்டுகளை ரிசர்வ் வங்கி அறிமுகப்படுத்தியது.
இந்நிலையில்,ரூ. 2000 நோட்டுகள் புழக்கத்திலிருந்து நீக்கப்படுவதாக ரிசர்வ் வங்கி அதிரடி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
ரூ.2000 ரூபாய் நோட்டுகள் வரும் 2023 செப்டம்பர் 30 தேதி வரை திரும்ப பெறப்படும் என மத்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
ரூ.2,000 நோட்டுகளை வங்கிகள் வாடிக்கையாளர்களுக்கு இனி விநியோகிக்கக் கூடாது என்றும், உடனடியாக . இந்த நடைமுறை அமலுக்கு வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.
பொதுமக்கள் தங்களிடம் இருக்கும் ரூ.2,000 நோட்டுகளை இம்மாதம் (மே) 23-ம் தேதி முதல் வங்கிகளில் கொடுத்து கணக்கில் வரவு வைத்துக்கொள்ளலாம் அல்லது தங்களுக்கு தேவை படும் ரூபாய் நோட்டுகளாக மாற்றிக் கொள்ளலாம்.
ஒரு நேரத்தில் அதிகபட்சம் 20,000 ரூபாய் வரை வங்கிகளில் இவ்வாறு வரவு வைக்க முடியும் அல்லது மாற்ற முடியும்.
ரூ. 2,000நோட்டுகளை எந்த ஒரு வங்கிக் கிளையிலும் மாற்றிக் கொள்ள முடியும். இதற்கான வாய்ப்பு வரும் செப்டம்பர் 30-ம் தேதி வரை அமலில் இருக்கும். 2,000 ரூபாய் நோட்டுக்கள் பணமதிப்பிழப்பு செய்யப்படவில்லை.
அதேநேரத்தில், அவை திரும்பப் பெறப்படுகின்றன. வங்கிகளில் வரவு வைப்பது என்பது வழக்கமாக வரவு வைப்பது போன்றதே. இதில் கட்டுப்பாடுகள் கிடையாது இவ்வாறு ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.












