நடிகர் விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்து வரும் ‘லியோ’ படத்தில் ஏற்கனவே த்ரிஷா, சஞ்சய்தத், பிரியா ஆனந்த், சாண்டி மாஸ்டர், மிஷ்கின், மன்சூர் அலிகான், மேத்யூ தாமஸ், கவுதம் மேனன்,ஆக்சன் கிங் அர்ஜுன் என ஒரு பெரிய நட்சத்திர பட்டாளமே நாத்து வரும் நிலையில்,இப்படத்தில் இசையமைத்து வரும் இசையமைப்பாளர் அனிருத் இப்படத்தில் இடம்பெற்றுள்ள ஒரு பாடல் காட்சியில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் இப்படத்தில் டிகர் ஹரிஷ் உத்தமனும் இணைந்துள்ளார்.இது குறித்த தகவலை, இப்படத்தில் இடம்பெறும் ஒரு வசனக்காட்சியின் புகைப்படத்தை
அவர் தனது இன்ஸ்டா ஸ்டோரியில் பகிர்ந்துள்ளார்.
அதில்,‘லியோ’ நீங்கள் ஆபத்தில் இருக்கிறீர்கள் என்று ஹரிஷ் உத்தமன் கூறுவதும், அதற்கு விஜய், ‘நான் ஆபத்தில் இல்லை, என்னால் தான் ஆபத்து’ என்று கூறும் காட்சியும் புகைப்படத்தில் இடம்பெற்று உள்ளது.இது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது..













