தமிழ்த்திரையுலகில் 90 களில் முன்னணி நடிகையாக இருந்த நடிகை ஊர்வசி, பிசியாக இருக்கும் போதே மலையாள நடிகர் நடிகர் மனோஜ் கே. ஜெயன் என்பவரை 2000ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு பெண் குழந்தையும் உள்ளது. ஆனால் 2008 ஆம் ஆண்டு கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்தனர்.இதையடுத்து நடிகர் மனோஜ் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டார். அதே போல நடிகை ஊர்வசியும் தனது 40 வது வயதில் இரண்டாம் திருமணம் செய்து கொண்டார். தற்போது அம்மா, அண்ணி போன்ற கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்
.
இந்நிலையில் சமீபத்தில் தனது யூடியூப் சேனல் ஒன்றில் தனது முதல் திருமண வாழ்க்கை முறிவு குறித்து கூறியுள்ளதாவது,”எனது முதல் திருமணம் நடிகர் மனோஜ் கே. ஜெயனுடன் நடந்தது. அவருடனான வாழ்க்கை சில ஆண்டுகளில் முடிந்துவிட்டது,
அதற்கு காரணம் குடிப்பழக்கம், அவரது குடும்பத்தில் அனைவருமே ஒன்றாக குடிப்பார்கள், அவர் தான் எனக்கு ஊற்றித்தருவார். தினமும் குடித்து குடித்து நான் குடிக்கு அடிமையாகி விட்டேன், என்னை குடிக்கு அடிமையாக்கியதே அவர் தான், அதுவே, நாங்கள் பிரிய காரணமாக அமைந்துவிட்டது.அதே குடியை காரணம் காட்டி என் மகளையும் என்னிடம் இருந்து பிரித்துவிட்டார். அப்போது நான் தனிமையில் மனஅழுத்தத்தில் இருந்தேன். அப்போது தான், எங்களுடைய குடும்ப நண்பர் சிவபிரசாத் என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டேன். .தற்போது எங்களுக்கு ஒரு மகன் இருக்கிறான். நாங்கள் இப்போது மகிழ்ச்சியாக இருக்கிறோம்.இவ்வாறு அவர் கூறியுள்ளார் ஊர்வசியின் பேட்டி தமிழ், மலையாள திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.













