ஜெயிலர் படத்தை தொடர்ந்து ரஜினிகாந்த் அடுத்ததாக தனது மகள் இயக்கத்தில் லால் சலாம் படத்தில் நடித்து முடித்துள்ளார். விரைவில் வெளியீட்டுக்கு தயாராகும் இப்படத்தை தொடர்ந்து ரஜினிகாந்த அடுத்ததாக ஞானவேல் இயக்கத்தில் இணைந்துள்ளார். விரைவில் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது.
ஈநிலையில் ஜெயிலர் 2 படத்திற்கான வேலைகளும் தொடங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இப்படத்தின் படப்பிடிப்பு, லோகேஷ்கனகராஜ் இயக்கவுள்ள தலைவர் 171 படத்திற்கு பின்னர் இந்தப் படத்திற்கான வேலைகளை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தொடங்கலாம் என தெரிகிறது.இந்நிலையில் ராஜ்கமல் இன்டர்நேஷனல் பட நிறுவனம் தயாரிப்பில், தனுஷ் நடிக்க உள்ள படத்தை நெல்சன் இயக்கவுள்ளதாக தெரிகிறது. இப்படத்தை தொடர்ந்து ஜெயிலர் 2 படம் குறித்த அறிவிப்பு வெளியாகலாம் என்கின்றனர்













