
தயாரிப்பாளர் ஷண்முகம் ராமசாமிக்கு நடிக்க வேண்டும் என்பது தணியாத ஆசை. அதற்காக சான்ஸ் கேட்டு அலைய அவரது ஐ. டி புத்தி இடம் தரவில்லை. நாமே தயாரித்து நடித்தால் என்ன நீயே நடி ராஜா என்று அவரது மனது சொன்னதால் தயாரிப்பாளர் நடிகராக ஆகிவிட்டார். படத்திற்கு வில்லன் அவரே.!
ஐமா என்றால் கடவுள் சக்தி என்று அர்த்தமாம். தற்கொலை செய்யப்போகிறேன் என்று முடிவு எடுத்துவிட்ட ஒருவன் ,தனக்கு மரண ஆபத்து வருகிறபோது அதிலிருந்து தப்பிக்கவே வழி தேடுவான் என்பது இயல்பு..இந்த அறிவியல், ஒரு சஸ்பென்ஸ் த்ரில்லர் படமாக மாறி இருக்கிறது.
கதையின் நாயகன் ,நாயகி இருவரும் ஒரு அறையில் சிக்கிக் கொள்கிறார்கள் . அதிலிருந்து எப்படி தப்பித்தார்கள் என்பதே கதை.
சின்ன வயசு விஜய் மாதிரி இருப்பதாக சில காட்சிகளில் தோன்றுகிற நாயகன் யூனஸ்.துடிப்பான இளைஞர் . லிப் லாக் பண்ணுகிறார். லட்டு மாதிரியான காட்சி அவருக்கு சுவையாக இருந்திருக்கும். குளோஸ் அப்பில் காட்டியிருந்தால் பார்வையாளர்களுக்கும் பச்சக் காக இருந்திருக்கும்.
கதாநாயகியாக எவ்லின் ஜூலியட் . விமானப் பணிப் பெண்ணாக பணியில் இருந்தவராம் . நல்ல உயரம். உயரத்துக்கு தகுந்த கவர்ச்சி இல்லை. ஆனாலும் .அடைபட்டுக் கிடக்கிற இடத்திலிருந்து தப்பிக்கும் காட்சிகளில் தேவையான நடிப்பைக் கொடுத்திருக்கிறார்.
வில்லனாக தயாரிப்பாளர் சண்முகம் ராமசாமி . தப்பில்லை சாமி.!
அகில் பிரபாகரன்,ஷாஜி, ஷீரா,மேகா மாலு,மனோகரன் ஆகியோரும் ஆஜர் பட்டியலில் இருக்கிறார்கள்.
கே ஆர்.ராகுல் இசை. பாடல்கள் இருக்கின்றன.
ஒளிப்பதிவு செய்திருக்கும் விஷ்ணு கண்ணன் குறுகிய அறைக்குள் ஜாலம் செய்திருக்கிறார் . வெல் !
படத்தொகுப்பு அருண்ராகவ், கத்திரியில் கூர்மை இல்லை.
ராகுல் ஆர்.கிருஷ்ணா, இயக்கம். பழுதில்லை.












