இந்திய திரை உலகில் இந்தப் படம் ‘அயலான்’ முதல் முயற்சி . என்பதை அழுத்தமுடன் பதிவு செய்திருக்கிறார்கள்.
அதாவது ஏலியன் எனப்படுகிற வேற்றுக் கிரக மனிதனை வைத்து கற்பனை சிறகடித்துப் பறந்திருக்கிறார்கள் . ஆண்டுகளை தின்றுள்ள இந்தப்படத்தை சீராக வளர்த்திருக்கிறார் இயக்குநர் ரவிக்குமார். .இதற்காகவும் அவரைப் பாராட்டலாம் .
தமிழர் திருநாளான பொங்கல் ,மற்றும் தமிழர் புத்தாண்டு கொண்டாட்டமாக திரையிடப்பட்ட படங்களில் இரண்டு படங்கள் கலெக்ஷனில் முன்னணியில் இருப்பதாகச் சொல்கிறார்கள். அந்த இரண்டில் ஒன்று அயலான்.
இந்த அயல் கிரகத்தான் நல்லவனா,கெட்டவனா ?
கெட்டவனாக ஹாலிவுட் பார்க்கிற ஏலியனை , ரவிக்குமார் -சிவகார்த்திகேயன் இருவரும், நல்லவனாக உருவகப் படுத்தி வித்தியாசப் படுத்தியுள்ளனர் இந்தப் படத்தில்.
கிராமிய நலனுக்காக சென்னைப் பட்டணம் வந்த சிவகார்த்திகேயன் ஏலியனை சந்திக்கிறார். அதனுடைய நோக்கம் அறிந்து அதனுடன் கூட்டணி அமைத்துக் கொள்ள அந்த கூட்டணி மக்கள் மனசை வென்றதா?இல்லையா ?என்னவாகியது என்பதுதான் கதை.!
காமிக் புக்ஸ் படிக்கிற ஆர்வம் பசங்களுக்கு மட்டும் இல்லாமல் பெண்களுக்கும் இருக்கிறது. சிவகார்த்திகேயன் ஏற்றுக்கோள்கிற முகம் என்பதால் இந்த ஏலியனும் ,சிவாவும் அவர்களின் விருப்ப நாயகனாக மாறுகிறார்கள். இதை இயக்குநர் ரவிக்குமார் தனக்கு சாதகமாக்கி கொண்டிருக்கிறார். கூடுதலாக வி. எப் . எக்ஸ் என்கிற அசுர பலம் சிறப்புடன் கையாளப்பட்டுள்ளதால் இளம் பெண்ணின் கவர்ச்சி படத்தில் இருக்கிறது .!
நாயகி ரகுல்ப்ரீத்சிங் பாடல்கள் மற்றும் சில காட்சிகளுக்குப் பயன்பட்டிருக்கிறார்.கொலு பொம்மை . ஏலியன் இருக்கிற போது இந்த ஏஞ்சல் எதுக்கு ,டைவர்ட் ஆகிவிடக்கூடாது என புத்திசாலித்தனமாக நடந்திருக்கிறார்கள்.
கருணாகரன், யோகிபாபு, கோதண்டம் ஆகியோர் சிரிப்புக்கு நேர்ந்து விட்டவர்கள்.
சரத் கேல்கர் வில்லன். இன்டர்நேஷனல் பிராட். பெரிய மனுசன் இவருடன் இஷாகோபிகரும் நடித்திருக்கிறார். கூடுதல் கவன ஈர்ப்பு.
ஏ.ஆர்.ரகுமான் இசையில் பின்னணி இசை பெரிய பலமாக இருக்கிறது. ஹாலிவுட் தரத்தில் மொத்த படமும் இருப்பதற்கு ரகுமானும்,ஒளிப்பதிவாளர் நீரவ் ஷாவும் முக்கிய காரணம்.!
படத்தில் இருக்கிறது சிற்சில குறைபாடுகள். ஆனாலும் உறுத்தவில்லை ,
நல்ல கருத்து. பார்க்கலாம்.
–தேவிமணி