நடிகர் அல்லு அர்ஜூன் நடிப்பில்,இயக்குநர் சுகுமார், மைத்ரி மூவி மேக்கர்ஸ் உடன் இணைந்து உருவாகி இருக்கும் இந்த ஆக்ஷன் பேக்ட் பான்-இந்தியா படமான ‘புஷ்பா: தி ரூல்’ வரும் ஆகஸ்ட் 15, 2024 அன்று வெளியாக உள்ளது.
மேலும் அல்லு அர்ஜுனின் ரசிகர்களை மகிழ்விக்கும் விதமாக இப்படத்தின் டீசர் நடிகர் அல்லு அர்ஜூனின் பிறந்தநாளான ஏப்ரல் 8 அன்று வெளியாகும் என்று படக்குழுவினர் மகிழ்ச்சியுடன் அறிவித்துள்ளனர்.
முதல் பாகத்தை போலவே இரண்டாம் பாகத்திலும் ஃபஹத் ஃபாசில் பழிவாங்கும் வஞ்சம் கொண்ட கதபாத்திரம் மூலம் அல்லு அர்ஜூனுடன் இணைகிறார்.இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார் மற்றும் ஒளிப்பதிவாளர் மிர்ஸ்லோ குபா ப்ரோஸெக் ஒளிப்பதிவு செய்துள்ளார்