பேய்க்கதை, மாய மந்திரம் ,சூனியக் கதைகள் ,ஆவி உலகம் இப்படியான கற்பனைகளில் நம்பிக்கை வைத்துள்ள வெகு ஜனம் உலகம் முழுவதும் பரவிக் கிடக்கிறது. இவர்களுக்கான திரைப்படங்கள் வந்து கொண்டுதான் இருக்கின்றன.
தமிழ்த் திரையிலும் சுந்தர். சி,ராகவா லாரன்ஸ் ஆகிய வல்லவர்கள் ஆவிகளை வளர்த்துக் கொண்டு வருகிறார்கள்.
இவர்களுக்கு மத்தியில் இயக்குநர் குகன் சென்னியப்பன் ‘ புரட்சிகரமாக’ சிந்தித்து ‘வெப்பன் ‘திரைப்படத்தைக் கொடுத்திருக்கிறார் மில்லியன் ஸ்டுடியோ தயாரிப்பில், எழுதி இயக்கியிருக்கிறார்.
புரட்சித்தமிழன் சத்யராஜ், ஹோட்டல் அதிபர் வசந்த் ரவி,இயக்குநர் ராஜீவ் மேனன், தான்யா ஹோப், யாஷிகா ஆனந்த், மைம் கோபி, கனிஹா, கஜராஜ், சையத் சுபன், ,வேலுபிரபாகரன், வினோதினி வைத்தியநாதன், பெனிடோ பிராங்க்ளின், மாயா , ரகு இசக்கி, ‘சூப்பர் சிங்கர் ஜூனியர்’ மேக்னா சுமேஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஒளிப்பதிவு பிரபு ராகவ்,இசை ஜிப்ரான்.
மனித சக்தியை மீறிய ஒரு அதீத சக்தி பெற்றவர்கள் பூமியில் இருப்பதாக வசந்த் ரவி, நம்புகிறார். .ராஜீவ் மேனன் ‘பிளாக் சொசைட்டி’ என்ற பெயரில், உயிரித் தொழில்நுட்பத்தின் மூலம் மனிதர்கள் பலியாக்கப்படுகிற ஆராய்ச்சியை செய்கிறார். .
அப்போதுதான் வல்லவனுக்கும் வல்லவனான சத்யராஜ் இருப்பது தெரிகிறது. மன ரீதியாக இந்த மூன்று வல்லவர்களும் வெறுபட்டவர்கள் என்றாலும் இணைகிறார்கள். அதன் பிறகு என்ன நடந்தது என்பது தான், வெப்பன் கதை.
நேதாஜி,இட்லர் சந்திப்பு ,ரகசிய சீரம் என திரைக்கதை சுற்றுகிறது. இயக்குநரின் ஆர்வக்கோளாறு . யாரையும் குற்றம் சொல்வதற்கில்லை.
பிளாக் சொஷைட்டியின் தலைவராக ராஜீவ் மேனன். யாஷிகா ஆனந்த், மைம் கோபி, கனிஹா, கஜராஜ், சையத் சுபன், ,வேலுபிரபாகரன், வினோதினி வைத்தியநாதன், பெனிடோ பிராங்க்ளின், மாயா எவரும் ஈர்க்கவில்லை! செட் பிராப்பர்ட்டிஸ் !
பிரபு ராகவ்வின் ஒளிப்பதிவும், ஜிப்ரானின் பின்னணி இசையும் ஓகே!
வெப்பன் –டம்மி.!
–தேவிமணி