பாயல் கபாடியா இயக்கத்தில் வெளியான படம், ‘ஆல் வி இமாஜின் அஸ் லைட்’ இந்தப் படத்தில் கனி குருஸ்தி, சாயா கதம், திவ்ய பிரபா மற்றும் ஹிருது ஹாரூன் ஆகியோர் நடித்தனர். இந்தப் படம் கேரளாவில் இருந்து மும்பைக்கு, நர்ஸ் வேலைக்காகச் செல்லும் இரண்டு பெண்களை மைய்யப்படுத்தியதாகும். இப் படத்தில் நடிகை திவ்ய பிரபா பல ஆண்களுடன் நெருக்கமாக இருப்பது போன்ற காட்சிகளில் நடித்தார். சில காட்சிகளில் நிர்வாணமாகவும் நடித்தார். இந்தப் படம் பிரான்ஸில் நடைபெற்ற 77வது கான்ஸ் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டு உயரிய விருதான ‘கிராண்ட் பிரிக்ஸ்’ விருதை வென்று அசத்தியது.இந்நிலையில் சமூக வலைதளங்களில் திவ்யா பிரபா நிர்வாணமாக நடித்த காட்சிகள் தீயாக பரவி வருகின்றது.இந்தக் காட்சிகளைப் பார்த்த நெட்டிசன்களில் சிலர் நடிகை திவ்யா பிரபாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், இந்த விமர்சனங்களுக்கு பதிலளிக்கும் வகையில், திவ்ய பிரபா கூறியுள்ளதாவது,” நான் ஒரு படத்தில் நடிக்கின்றேன் என்றால், அந்தப் படத்தின் கதையைப் புரிந்துகொண்டு, எனது கதாபாத்திரத்தினை பிடித்துத்தான் நடித்து வருகின்றேன். அப்படித்தான், ‘ஆல் வி இமாஜின் அஸ் லைட்’ படத்திலும் எனது, கதாபாத்திரத்தினை புரிந்து நடித்தேன். எனது கதாபாத்திரம் தொடர்பாக சிலர் கமெண்ட் செய்வதை கவனித்துதான் வருகின்றேன். இவர்கள் மொத்த ரசிகர்கள் பட்டாளத்தில் வெறும் 10 சதவீதம்பேர்தான். இவர்களின் கமெண்ட் என்னை எந்தவகையிலும் பாதிக்காது. நான் ஏற்கனவே பல படங்களில் நடித்து புகழும் விருதுகளும் பாராட்டுகளும் பெற்றுள்ளேன். அப்படியான எனக்கு விளம்பரத்திற்காகவோ, பணத்திற்காகவோ இந்தப் படத்தில் நடிக்கவேண்டிய அவசியம் இல்லை. படத்தின் தேவைக்காக கதாபாத்திரத்தின் தன்மையை உணர்த்துவதற்காக நிர்வாண காட்சியில் நடித்தேன்” எனக் கூறியுள்ளார்.













